சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

பிசிசிஐ இடம் வத்தி வைத்ததே கௌதம் கம்பீர் தான்.. இந்திய அணியின் சுதந்திரத்திற்கு எமனாய் நிற்கும் எல்லைச்சாமி.

மூத்த வீரர்களாகிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின்ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பி.சி.சி ஐ இடம் பல புகார்களை கூறியதாக தெரிகிறது. இதன் காரணமாக அனைத்து வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என உத்தரவு போட்டிருக்கிறது பிசிசிஐ.

இலங்கை, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்தது இந்திய அணி. இதனால் ஆஸ்திரேலியா தொடருக்கு பின் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் நேர்காணல் நடைபெற்றது.

அப்பொழுது சில வீரர்கள் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை பற்றி புகார் அளித்ததாக தெரிகிறது. இதன் எதிரொலியாக கம்பீரும் மூத்த வீரர்களின் நடவடிக்கை சரியில்லை என பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

இதனால்,விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் உள்ளூரில் நடைபெற்று வரும் ரஞ்சித் தொடரில் விளையாட வேண்டும் என கூறியிருக்கிறது பிசிசிஐ. விராட் கோலி 2012 ஆம் வருடம் உள்ளூர் போட்டியில் விளையாடினார் அதன் பின் இன்று வரை விளையாட வில்லை.

இப்பொழுது பிசிசிஐ, வீரர்கள் அனைவரும் சக வீரர்களுடன் தான் பயிற்சியின் போது பயணிக்க வேண்டும், 45 நாட்களுக்கு மேல் வெளி நாட்டுத்தொடர் என்றால் இரண்டு வாரங்கள் மட்டுமே குடும்பத்திற்கு அனுமதி. தனி வேலை ஆட்களை உடன் அழைத்துச் செல்லக்கூடாது, விதிமுறைகளை பின்பற்ற தவறினால் நடவடிக்கை பாயும் என பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

Trending News