நடிகர் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் ரெமோ எனும் படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து இப்பொழுது சிவகார்த்திகேயனை ஓவர் டெக் பண்ணும் அளவிற்கு ஒரு காமெடி நடிகர் புதிய வேடத்தில் களமிறங்கி இருக்கிறார். இந்த படமும் இவருக்கு நிச்சயமாக வெற்றி படமாக அமையும் என்று நம்பப்படுகிறது.
தற்போது இவர் கோலிவுட்டின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர். அது மட்டுமில்லாமல் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் ஒரு புதிய படத்தில் ஆங்கிலோ இந்தியன் பாட்டியாக நடித்து வருகிறார்.
Also read: டாப் ஹீரோக்களின் மார்க்கெட்டை குறைக்கும் 3 இயக்குனர்கள்.. மீள முடியாமல் தவிக்கும் சிவகார்த்திகேயன்
இப்படி மாறுபட்ட வித்தியாசமான கதையை எடுத்து நடித்து வருபவர் தான் யோகி பாபு. இவர் இப்பொழுது மிஸ் மேகி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை லதா ஆர் மணியரசு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார்.
இப்பொழுது இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள டீசரை நடிகை ஆத்மிகா அவரது ட்விட்டர் அக்கவுண்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மேலும் இந்த டீசர் தற்பொழுது இணையதளத்தில் பெரிய அளவில் ட்ரெண்டாகி போய்க் கொண்டிருக்கிறது.
Also read: பாலிவுட் நடிகையை கவர்ந்த யோகிபாபு.. அண்ணாச்சிக்கு ஜோடினா சும்மாவா!
இந்த டீசரில், யோகி பாபு,ரெக்கார்ட் பிளேயர்,பழங்கால உணவுகள் மற்றும் சார்லி சாப்ளின் படத்தை காணலாம். மேலும் இதில் யோகி பாபுவின் கெட்டப்பை பார்த்து ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை தூண்டுகிறது. அந்த அளவுக்கு இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டீசர் வேற லெவல்ல இருக்கு.
இந்த படத்திற்கான அடுத்த அப்டேட்டுகள் கூடிய விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவர் கதாநாயகனாக நடித்த கோலமாவு கோகிலா மற்றும் மண்டேலா இந்த படத்தைப் போலவே இவரின் மிஸ் மேகி படமும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also read: யார்க்கர் நடராஜனுக்கு பரிசு கொடுத்த யோகிபாபு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்