முரட்டு நடிகராக தமிழ் சினிமாவை கலக்கிய நடிகர் ராஜ்கிரண் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியா காதல் திருமணம் செய்துள்ளார்.
இவர் சன் டிவியில் திருமுருகன் எழுதி மற்றும் இயக்கி ஒளிபரப்பான நாதஸ்வரம் என்கின்ற தொடரில் காமெடி நடிகராக நடித்த நடிகர் முனீஸ் ராஜா என்பவரை பேஸ்புக் மூலமாக காதலித்திருக்கிறார். முனீஸ் ராஜா பிரபல வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகரான சண்முகராஜாவின் தம்பி.
Also Read: மீண்டும் சீரியலில் நடிக்கப் வரும் ஆலியா.. இந்த வாட்டி விஜய் டிவிக்கு ஆப்பு
ஜீனத் பிரியா-முனீஸ் ராஜா காதல் ஜோடி, வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு குடும்பத்திலும் இந்த காதலுக்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த ராஜ்கிரணின் மகள் அவருக்குத் தெரியாமலே திருமணம் செய்து கொண்டது கோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டது.இன்றுவரை ராஜ்கிரண் குடும்பத்தில் இவர்களை ஏற்றுக் கொள்ளாமல் தான் இருக்கிறார்களாம்.

Also Read: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் சன் டிவி.. டாப் 5லிருந்து துரத்தப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்
ஆனால் முனீஸ் ராஜா குடும்பத்தில் காதலையும் கல்யாணத்தையும் ஏற்றுக் கொண்டனர். முனீஸ் ராஜா ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்ற தொடரில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். அதன் மூலம் அவருக்கு தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் காமெடி வேடங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் இந்த காதல் ஜோடியின் திருமணத்தை சீரியலுக்காக பரபரப்பு விளம்பரமாக இருக்குமோ என்று கூறப்பட்ட நிலையில், அது இப்போது உண்மைதான் என்று உறுதியாகியது. பல தடைகளை மீறி திருமணத்தில் இணைந்த இந்த காதல் ஜோடிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.
Also Read: மறு ஒளிபரப்பில் மண்ணை கவ்விய 6 மெகா சீரியல்கள்.. எதிர்ப்பார்ப்புக்கு கிடைத்த மரண அடி