புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

அஜித், விஜய், ரஜினியை கிழித்து தொங்கவிட்ட செந்தில்.. இந்த துணிச்சல் யாருக்குமே வரலையே!

Comedy Actor Sendhil : சினிமாவில் நல்ல தலைசிறந்த காமெடியனாக அனைவரையும் சிரிக்க வைத்து நகைச்சுவையை தெறிக்க விட்டவர் தான் நடிகர் செந்தில். இவர் தற்போது நடிகர் சங்க கட்டிடம் சம்பந்தமாக அளித்த பேட்டியில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய், ரஜினியை துணிச்சலுடன் கேள்வி கேட்டு அவர்களை கிழித்து தொங்க விட்டிருக்கிறார்.

அதாவது சினிமாவில் ஏற்படும் நல்லது கெட்டது அனைத்தையும் பார்க்கும் பொறுப்பில் நடிகர் சங்கத் தயாரிப்பாளர் நிறுவனம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கான சரிவர கட்டிடத்தை கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள். அதற்கு காரணம் போதிய நிதி உதவி கிடைக்காததால் அப்படியே நிறுத்தப்பட்டிருக்கிறது.

Also read: எனக்குன்னு எங்கிருந்து வரீங்க டா! தளபதி கட்சி ஆரம்பிக்கும் இந்த நேரத்தில் சந்தி சிரிக்க வைத்த திருச்சி செந்தில்

இந்த பிரச்சனை கிட்டத்தட்ட பல வருடங்களாக இருப்பதால் அதற்கான கட்டிடத்தை சரியாக கட்ட முடியாமல் இருந்து வருகிறது. அதாவது சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 67வது பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி மற்றும் பல கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

அப்பொழுது இன்னும் ஏன் கட்டிடம் கட்டவில்லை என்று கேள்வி எழுப்பிய நிலையில், கொரோனா காலத்திற்குப் பிறகு 40% விலைவாசி அனைத்தும் உயர்ந்து இருப்பதால் இன்னும் கட்ட முடியவில்லை என்ற காரணத்தை கூறுகிறார்கள். அத்துடன் 40 கோடி வரை வங்கியில் கடன் வாங்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

Also read: செந்தில் கவுண்டமணி காமெடி வசனங்களை டைட்டிலாக்கும் சந்தானம்.. தொடர் பிளாப்புக்கு பிறகும் தைரியமாக எடுத்த முடிவு

அதன்பின் வங்கியில் வாங்கும் கடனை அடைப்பதற்காக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியிருக்கிறார். இது சம்பந்தமாக பொதுக்குழுவிற்கு வந்த நடிகர் செந்தில் ஆவேசமாக பேசி இருக்கிறார். அதாவது கோடி கோடியாக ஊதியம் வாங்குகிறீர்களே, அதை வைத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்ட முடியாதா? என்று அனைத்து கதாநாயகர்களையும் பார்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்டிருக்கிறார்.

மேலும் கலைநிகழ்ச்சி, ஸ்டார் கிரிக்கெட் என டிக்கெட் போட்டு வசூலித்தது போதும். டாப் 10 நடிகர்கள் இதற்கு தகுந்த பண உதவி செய்தால் எளிதாக கட்டிடத்தை கட்டிட முடியுமே? அதை விட்டுட்டு கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன? இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் இதே மாதிரி ஒரு பிரச்சினையை சொல்லிக் கொண்டே வருவீர்கள் என்று துணிச்சலுடன் கேள்வி கேட்டு இருக்கிறார்.

Also read: கவுண்டமணி கூட்டணியில் வெற்றியடைந்த 5 ஹீரோக்கள்.. செந்தில் மார்க்கெட்டை இறக்கிவிட்ட சத்யராஜ்

Trending News