ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

நம்ம டாப் 12 ஹீரோக்களின் 25வது படங்களின் ஒட்டுமொத்த லிஸ்ட்.. சியானின் கேரியரை புரட்டி போட்ட சேது

Tamil TOP Actors 25th Flim: கோலிவுட்டில் டாப் நடிகர்களாக இருக்கும் 12 ஹீரோக்களின் 25 ஆவது படங்கள் எவை என்பதற்கான ஒட்டு மொத்த லிஸ்ட் வெளியாகி உள்ளது அதிலும் சீயான் விக்ரமுக்கு அமைந்த 25 வது படமான சேது அவரது சினிமா கேரியரையே புரட்டிப் போட்டது

தொடக்கத்தில் டாப் நடிகர்களுக்கு குரல் கொடுத்து கொண்டிருந்த விக்ரம் பின்பு துணை நடிகராகவும் அதன் பின் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் நடித்துக் கொண்டிருந்தார் ஆனால் அவருக்கென்று ஒரு தனி இடத்தை சினிமாவில் கொடுத்த படம் தான் சேது. இந்த படம் தான் விக்ரமின் 25வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: தனுஷிக்கு தம்பியாகும் கமலின் மகன்.. தடைபட்டு போன ஷூட்டிங், இணையும் பிரபல வில்லன்

அதேபோல் சிம்பு ஒரு சமயத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டு இருந்த நிலையில் அவருடைய 25ஆவது படமான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மாபெரும் ஹிட் கொடுத்தது இன்றும் காதலர்களால் போற்றப்படும் படம் என்றால் அது VTV தான் அதன் தொடர்ச்சியாக தனுஷை இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது அவருடைய 25வது படமான வேலையில்லா பட்டதாரி.

இந்த படத்தில் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் வேலை இல்லாமல் திண்டாடக்கூடிய நிலையையும் அவர்களுக்கு மட்டும் சரியான வாய்ப்பு கிடைத்தால் எங்கேயோ சென்று விடுவார்கள் என்பதையும் இந்த படத்தில் காட்டி இருப்பார். அதை போல் சினிமாவில் படிப்படியாக முன்னேறி இப்போது ஏகப்பட்ட ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கும் அஜித்குமாருக்கு 25வது படமாக அமைந்தது அமர்க்களம்.

Also Read: ஒரு வழியாக மொத்த ஸ்கிரிப்ட்டை உறுதி செய்த அஜித்.. சொன்ன மாதிரி ரிலீஸ் தேதியை லாக் செய்த மகிழ் திருமேனி

இந்த படத்தில் தான் அவருக்கு ஜோடியாக நடித்த கதாநாயகி ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தளபதி விஜய்க்கு 25ஆவது படம் கண்ணுக்குள் நிலவு. இதில் விஜய் ஷாலினியுடன் ஒரு மன நோயாளி போல் தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிக்காட்டி ஏகப்பட்ட ரசிகர்களுக்கு சொந்தக்காரரானார்.  அதை போல் சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதிக்கு 25-வது படமாக அமைந்தது சீதக்காதி. சூர்யாவின் 25வது படம் சூப்பர் ஹிட் அடித்த சிங்கம்.

ஜீவாவுக்கு 25 ஆவது படம் போக்கிரி ராஜா, விஷாலுக்கு 25வது படமாக அமைந்தது சண்டக்கோழி 2. இந்த படத்திற்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் சண்டக்கோழி முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்தது. நடிகர் சித்தத்திற்கு 25வது படம் எனக்குள் ஒருவன், ஆர்யாவிற்கு 25வது படமாக அமைந்தது கலகலப்பான காமெடி திரைப்படம் ஆன வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. இந்த படத்தில் ஆர்யாவுடன் சந்தானம் சரிக்கு சமமாக நடித்து காமெடியில் கலக்கி இருப்பார்.

Also Read: துல்கர் சல்மானை இயக்கும் அட்லீயின் சிஷ்யன்.. டைட்டிலை வித்தியாசமா இருக்கே! மாஸ் கூட்டணி

Trending News