நேற்று இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு எதிராக நான்காவது டி20 போட்டி நடைபெற்றது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் ,இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்தியா 1-3 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டியில் நடந்த வித்தியாசமான நிகழ்வு ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியது.
புதிதாய் அமைக்கப்பட்ட கிரிக்கெட் விதிமுறைகள் நேற்றைய போட்டியில் பின்பற்றப்பட்டது. 1.2.7.4 என்ற ரூலின் கீழ் ஒரு வீரருக்கு அபாயகரமாக அடிபட்டால், அதாவது வேகமாக வந்த பந்து தலையை தாக்கி மூளை அதிர்ச்சி ஏற்பட்டால் என்ன செய்வது. இதற்காகத்தான் இந்த விதிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது .
இதைத்தான் கண்கஷன் ரூல் என்கிறார்கள். இந்த விதிமுறைப்படி அப்படி ஒரு வீரருக்கு அடிபட்டால் அவருக்கு ஓய்வு கொடுக்கலாம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் களமிறங்கலாம். அந்த வீரர் எப்படியாப்பட்டவரோ அதை போல் தான் மாற்றுவீரர் இருக்க வேண்டும்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் சிவம் தூபேவிற்கு இப்படி அடிபட்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஹர்ஷித் ரானா களமிறங்கினார். அவரைப் போல இவரும் ஆல் ரவுண்டர். இவர் இந்த போட்டியில் இந்திய அணிக்காக அபாரமாக செயல்பட்டு மூன்று விக்கெட்டை வீழ்த்தினார்.
இதுதான் இப்பொழுது சட்ட சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சிவம் தூபே சமீபகாலமாக இந்திய அணியில் இடம் பெற்று விளையாட வில்லை. நிறைய போட்டிகளில் அவர் பந்து வீச்சு எடுபடவில்லை, அவருக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பும் நீண்ட நாட்களாக கொடுக்கவில்லை.
இப்படி இருக்கையில் ஹர்ஷித் ராணா பந்துவீசி 3 விக்கெட்டுகளை எடுத்தது தான் இப்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. மற்றொரு விதியான 1.2.7.3 இன் படி அப்படி மாற்று வீரராக களம் இறங்குபவரால் அந்த அணிக்கு அதிக பலன் கிடைக்கக் கூடாது என்றும் ரூல் இருக்கிறது.