Sivakarthikeyan 25: ஒவ்வொரு வருஷமும் ஒரு ஹிட் படத்தை கொடுத்து சிவகார்த்திகேயன் அவருடைய கேரியரில் மிகப்பெரிய உச்சத்தை அடைந்து விட்டார். அந்த வகையில் கடந்த ஆண்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் sk நடித்து வெளிவந்த அமரன் படம் அனைவராலும் பாராட்டப்பட்டு மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.
இந்த படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் கூடி விட்டது என்றே சொல்லலாம். இதனை இன்னும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அடுத்தடுத்து பெரிய இயக்குனர்களிடம் கூட்டணி வைத்து நடித்துக் கொண்டு வருகிறார். அமரன் படத்திற்கு பின் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஆக்சன் திரில்லர் படத்தில் நடித்த வருகிறார்.
இப்படத்திற்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவருடைய 25வது படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். படப்பிடிப்பு துவங்கிய நிலையில் இன்று இப்படத்துக்கான டீசர் 4 மணிக்கு ரிலீஸ் ஆகப்போகிறது. மேலும் இப்பிடத்திற்கு பராசக்தி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பராசக்தி என்கிற டைட்டில் ஏற்கனவே 73 ஆண்டுகளுக்கு முன் சிவாஜி நடிப்பில் கலைஞர் வசனத்துடன் ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் வகையில் சிவாஜிக்கு மாபெரும் வெற்றியை கொடுத்து இன்று வரை மறக்க முடியாத அளவிற்கு ஒரு சாதனை படமாக இருக்கிறது.
அந்த வகையில் எஸ்கே அவருடைய 25வது படத்திற்கு பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரவிமோகன் வில்லனாக நடிக்கிறார். ஆனால் இப்படத்தின் டைட்டிலை சிவகார்த்திகேயன் தெரிவிக்கும் முன்னரே விஜய் ஆண்டனி அவருடைய 25வது படத்துக்கு பராசக்தி என பெயர் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த சூழலில் இரண்டு நடிகர்களுமே அவருடைய 25வது படத்திற்கு ஒரே டைட்டில் பராசக்தி என வைத்துள்ளதாக குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழில் சிவகார்த்திகேயன் பராசக்தி டைட்டில் வைத்து உறுதியாகிவிட்டதால் விஜய் ஆண்டனி சைலன்டாக இதிலிருந்து ஒதுங்கி விட்டார்.
அதற்குப் பதிலாக தெலுங்கு டைட்டிலை பராசக்தி என விஜய் ஆண்டனி வைத்துக் கொள்கிறார். மேலும் தமிழில் பராசக்தி என்பதற்கு பதிலாக சக்தி திருமகன் என வைத்து 25வது படத்தின் டைட்டிலை வெளியிட்டு இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் அருண் பிரபு இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் வெளிவர போகிறது.