வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

எனக்கு இருக்கிற ஒரே எதிரி பிக்பாஸ் தான்.. அடி மடியிலேயே கை வைத்த தவளை

Biggboss 7: இதுவரை நடந்த பிக்பாஸ் சீசன்களில் ஏதாவது ஒன்று இரண்டு போட்டியாளர்கள் தான் வன்மத்தோடு இருப்பார்கள். ஆனால் இந்த ஏழாவது சீசன் தான் ரணக் கொடூரமாக சென்று கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த பேரும் வன்மத்தை தான் கக்கி கொண்டிருக்கின்றனர்.

அது ஒவ்வொரு வார இறுதியிலும் வெளிப்படையாக தெரிகிறது. யாராவது வீட்டை விட்டு வெளியே சென்றால் உடனே மீதம் இருப்பவர்கள் கண்ணீர் சிந்தி வழி அனுப்பி வைப்பார்கள். ஆனால் இந்த சீசனில் மட்டும்தான் இதுவரை ஒரு முறை கூட யாரும் எலிமினேஷன் சமயத்தில் கண்ணீர் விடவில்லை.

அந்த அளவுக்கு ஒட்டு மொத்த பேரும் விளையாட்டிலும், பிக் பாஸ் டைட்டிலிலும் மட்டுமே ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் மாயா, பூர்ணிமா இருவரும் தான் ரசிகர்களின் அதிகபட்ச வெறுப்புக்கு ஆளாகி இருக்கின்றனர்.

Also read: பிக்பாஸ் வீட்டில் சரவண விக்ரம் வாங்கிய மொத்த சம்பளம்.. மிக்சர் சாப்பிட்டுட்டு சும்மா இருந்ததுக்கே இத்தனை லட்சமா!

அதில் பூர்ணிமா தற்போது பிக்பாஸையே தனக்கு எதிரி என்று கூறி உள்ளார். அந்த வீடியோ தான் இப்போது ட்ரெண்ட் ஆகிக் கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் போது இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என நினைக்க வைத்திருக்கிறது. அதன்படி அனன்யா, விஜய் வர்மா மீண்டும் வீட்டுக்குள் வந்தபோது ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது.

அதில் அனன்யா ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் வைத்த பேண்டை கொடுத்தார். அதன்படி பூர்ணிமாவுக்கு தவளை என்ற பட்டத்தை கொடுத்தார். அது தனக்கு பிடிக்கவில்லை என்பதை அவர் அப்போதே தன் முகத்தில் வெளிப்படுத்தினார். அதை தற்போது பேசி இருக்கும் பூர்ணிமா விக்ரமை கரப்பான் பூச்சி என்று சொன்னது பெரிய அளவில் பிரச்சனை ஆனது.

அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினார்கள். அப்படிப் பார்த்தால் எனக்கு பிடிக்காத ஒரு பெயரை கொடுத்து அதை தலையில் இரண்டு நாட்கள் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும் என பிக் பாஸ் உத்தரவு போட்டது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Also read: இந்த வார நாமினேஷனில் சிக்கிய 6 போட்டியாளர்கள்.. மக்கள் துரத்தி அடிக்க போவது இவரை தான்

எனக்கு விருப்பம் இல்லாத ஒரு விஷயத்தை நீங்கள் கட்டாயப்படுத்தினீர்கள். நான் மத்தவங்கள செஞ்சதுக்கு பேரு Bully என்றால் நீங்கள் எனக்கு செய்ததற்கு பெயரும் அது தான் என்று கூறியுள்ளார். இப்படி தலக்கு தில்ல பாத்தியா என ஆடியன்ஸ் வாயை பிளக்கும் அளவுக்கு பூர்ணிமா பேசியிருக்கிறார். இதற்கு ஒரு பக்கம் ஆதரவும் ஒரு பக்கம் வழக்கம் போல எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

Trending News