திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சங்கீதா விஜய் திருமண நாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை.. எரியுற நெருப்பில் பெட்ரோல ஊத்திட்டாங்க!

Actor vijay: தளபதி விஜய் இப்போது லியோ படத்தில் நடித்து உள்ள நிலையில் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அரசியலிலும் படுபயங்கரமாக இறங்க இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே விஜய்யை சுற்றி நிறைய எதிர்மறையான விஷயங்கள் பரவி வருகிறது. இதற்கு விஜய் நினைத்தால் கண்டிப்பாக பதிலடி கொடுத்திருக்கலாம்.

ஆனால் அவரும் இதை அசால்டாக விட உண்மையாகவே பிரச்சனை இருக்குமோ என்று ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறார். அதாவது விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கிறார்கள் என்று ஒரு செய்தி இணையத்தில் வேகம் எடுத்தது. இதற்கு காரணம் நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

Also read: மதில் மேல் பூனையாக இருக்கும் விஜய்.. நம்பி அசிங்கப்பட போகும் தளபதி, அடித்து சொல்லும் பிரபலம்

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் தனது குடும்பத்துடன் விஜய் ஒரு புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர்ந்தாலே போதும். அதுவும் அவரது திருமண நாள் ஆகஸ்ட் 25ஆம் தேதி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏனென்றால் லண்டனில் உள்ள தனது மனைவி மற்றும் குழந்தைகளை அன்று விஜய் சந்திப்பார் என எதிர்பார்த்தனர்.

ஆனால் விஜய் லண்டன் செல்லவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இவ்வாறு எரிகின்ற பிரச்சனையில் திரிஷா பெட்ரோலை ஊற்றி இருக்கிறார். அதாவது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் திரிஷா லியோ படத்தில் நடித்திருக்கிறார். மேலும் விஜய்யின் பிறந்தநாளில் கூட திரிஷா அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

Also read: லோகேஷ் செதுக்கிய 5 கதாபாத்திரங்கள்.. மாஸ் காட்டிய விஜய் சேதுபதியின் ரெண்டு கேரக்டர்

இந்நிலையில் விஜய்யின் திருமண நாளில் வெளிநாட்டில் திரிஷா எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அந்த புகைப்படத்தை எடுத்தது விஜய் தான் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. வேண்டுமென்றே இந்த புகைப்படத்தை த்ரிஷா வெளியிட்டு இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள்.

ஆனால் திரிஷா இதை எதர்ச்சியாக கூட செய்திருக்கலாம். ரசிகர்களின் சந்தேகத்தை மேலும் தூண்டும் விதமாக விஜய் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் இருப்பது தான் பிரச்சனை. ஒருவேளை உண்மையாகவே விஜய் மற்றும் சங்கீதா இடையே பிணக்கு இருக்கிறதா என்ற குழப்பமும் இப்போது ஏற்பட்டு இருக்கிறது.

Also read: திரிஷா போல் வில்லியாக மாறிய ஜோதிகா.. கொடி பட சாயலில் உருவாகும் தளபதி-68

Trending News