ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மொட்டை கடுதாசியில் அறிக்கையை வெளியிட்டால் நம்பிடுவோமா.? மன்னிப்பை ஏற்காத இயக்குனர்

Gnanavel Raja : கோலிவுட் சினிமாவில் இப்போது பெரிய பஞ்சாயத்தாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிரச்சனை போய்க்கொண்டிருக்கிறது. ஒருபுறம் அமீருக்கு ஆதரவாக இயக்குனர்கள் படையெடுக்க மற்றொருபுறம் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாகவும் சிலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ஞானவேலுக்கு ஆதரவாக சிவகுமார் குடும்பம் இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால் சூர்யா மற்றும் கார்த்தியின் பெயரும் அடிபட்டது. என்ன தான் கார்த்தி இப்போது மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் அவருக்கு பிள்ளையார் சுழி போட்டது அமீர் தான்.

மேலும் இந்த பிரச்சனை இணையத்தில் பூதாகரம் எடுக்க இன்று ஞானவேல் ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதாவது அமீர் அண்ணன் என் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி காயப்படுத்தி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போது அவர் மனதை புண்படுத்தும்படி சில வார்த்தைகள் பயன்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் என்று அறிக்கை விட்டிருந்தார்.

Also Read : பருத்திவீரன் படத்தில் ராமதாஸை கவனிச்சீங்களா.! எவ்வளவு பெரிய சம்பவத்தை செஞ்சுட்டு அசால்டா அமீர் சொன்ன பதில்

இதை அடுத்து இயக்குனர் மற்றும் நடிகருமான சசிகுமார் தன்னுடைய சமூக வலைதளத்தில் ஞானவேல் கருத்துக்கு எதிராக ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதாவது போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது என்பதுதான் அந்த பதிவின் தலைப்பாக உள்ளது. ஞானவேல் மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டு என்ன என்ற வினவி இருக்கிறார்.

மேலும் அமீரை புண்படுத்தும் படி ஞானவேல் சில வார்த்தைகள் கூறியுள்ளதாக சொல்லி இருக்கிறாரே அது என்ன என்றும் கேட்டிருக்கிறார். மேலும் வேண்டுமென்றே ஒருவரை அவமானப்படுத்தி விட்டு அதன் பிறகு வருந்துவது எப்படி வருத்தமாகும். மேலும் இந்த அறிக்கை மூலம் ஞானவேல் அமீர் அண்ணனுக்கு சொல்ல வருவது தான் என்ன.

பெயரிடாத ஒரு மொட்டை கடிதாசியாக தான் இருக்கிறது. இது யாருக்கு என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தும்படி அடுக்கடுக்கான கேள்விகளை சசிகுமார் முன் வைத்திருக்கிறார். ஆகையால் ஞானவேல் ராஜா அறிக்கைக்கு பிறகும் இந்த பிரச்சனை தொடர் கதையாக தான் இருக்கப் போகிறது என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

சசிகுமார் பதிவு

sasikumar
sasikumar

Also Read : அமீர்க்கு ஒன்னுனா நாங்க சும்மா இருக்க மாட்டோம் கௌதம், வீரா.. ராஜனுக்கு வக்காலத்து வாங்கிய 6 பிரபலங்கள்

Trending News