வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Priyanaka: பிரியங்கா எடுத்த முடிவு, அடிவாங்கும் டிஆர்பி.. குக் வித் கோமாளிக்கு சன் டிவி வைத்த சூனியம்

Cook with Comali: இப்ப இருக்கிற ட்ரெண்டிங்க்கு ஏற்ற மாதிரி விஜய் டிவியில் உள்ள நிகழ்ச்சிகள் மக்கள் அனைவரையும் கவர்ந்து வருகிறது. முக்கியமாக ரியாலிட்டி ஷோ மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் வித்தியாசமான முறையில் நடத்தி மிகப்பெரிய டாப்புக்கு போய் விட்டார்கள்.

அதில் ஒரு நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. கடந்த நான்கு சீசன்களும் மக்களின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக மக்களிடத்தில் தனித்துவமான ஒரு பெயரைப் பெற்று இருக்கிறது. அதற்கு கோமாளி மற்றும் குக் போன்ற எத்தனையோ பேர் வந்துட்டு போனாலும், நடுவராக கலக்கி கொண்டு இருந்த வெங்கட் பட் மற்றும் செஃப் தாமு இருவருமே அல்டிமேட் என்று சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கி விட்டார்கள்.

இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன் ஆரம்பித்த சீசன் 5 தற்போது தட்டு தடுமாறி கொண்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் குக் வித் கோமாளிக்கு பில்லர் ஆக இருந்த செஃப் வெங்கட் பட் சன் டிவிக்கு போனதால் தான். அதுவும் விஜய் டிவி கரெக்டா ஆரம்பித்த பொழுது சன் டிவியில் இதே மாதிரி டாப்பு குக்கு டூப்பு குக்கு ப்ரோமோவை வெளியிட்டு குக் வித் கோமாளிக்கு சன் டிவி சூனியம் வைத்து விட்டது.

தொடர்ந்து அடி வாங்கும் குக் வித் கோமாளி

ஏற்கனவே செஃப் வெங்கட் பட் இல்லாததால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சுவாரசியமாக இல்லை. அதனால் டிஆர்பி ரேட் அடி வாங்கிவிட்டது. இவரை தொடர்ந்து ஜிபி முத்து, தீனா மற்றும் பலர் விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு போய் விட்டார்கள். அதே மாதிரி இரண்டு வாரங்களாக குக் வித் கோமாளியில், கோமாளியாக இருந்த நாஞ்சில் விஜயன் விலகப் போவதாக நேற்று அறிவித்துவிட்டார்.

அதே மாதிரி இந்த நிகழ்ச்சியை தயாரிக்கும் பாக்ஸ் ஆப் கம்பெனி நிகழ்ச்சிக்கும் நான் வரமாட்டேன் என்று கூறிவிட்டார். நேற்று இப்படி இவர் போட்ட பதிவை பார்த்த பலரும் இது என்னடா விஜய் டிவிக்கு வந்த சோதனை என்று சொல்வது போல் நிலைமை ஆகிவிட்டது. அத்துடன் பிரியங்காவும் நான் இதிலிருந்து வெளியே போக வேண்டும் என்கிற மாதிரி சொல்லி இருக்கிறார்.

அதற்கு காரணம் இந்த வாரம் கடல் உணவுகளை வைத்து சாப்பாடு செய்யும் போட்டி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் பிரியங்காவிற்கு கோமாளியாக நடிகை ஷஃப்னம் வந்திருக்கிறார். இவரை பார்த்ததும் பிரியங்கா நான் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியே போய் விடுகிறேன் என்று கூறியிருக்கிறார். இதற்கு என்ன விதிமுறைகள் என்று சொன்னால் நான் அதை ஃபாலோ பண்ணி வெளியே போய் விடுகிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று கதறி இருக்கிறார்.

இதை விஜய் டிவியின் youtube பக்கத்தில் இருந்து வீடியோவாக அட்மின் வெளியீட்டு இருக்கிறார். தற்போது இதுதான் ஹாட் டாபிக்காக அனைவரும் விமர்சிக்கப்பட்டு வருகிறார்கள். ஆரம்பித்த இரண்டு வாரத்திலேயே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தொடர்ந்து சிக்கல் வந்து கொண்டே இருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு ஆரம்பிக்கப் போகிறார்கள். அப்படி மட்டும் வந்துவிட்டால் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிலமை கேள்விக்குறியாகத்தான் அந்தரத்தில் தொங்கும்.

Trending News