புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சும்மா இருந்தே லட்சங்களை சுருட்டிய கூல் சுரேஷ்.. 76 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு இவ்வளவு சம்பளமா.!

Coll Suresh’s Salary: விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆனால் இந்த சீசனை பொருத்தவரையில் அது கொஞ்சம் குறைவு தான். அந்த அளவுக்கு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி சோசியல் மீடியாவில் ரசிகர்களால் கிழித்து தொங்கவிடப்பட்டு வருகிறது.

இதில் ஆடியன்ஸ் கமலையும் விட்டு வைக்காமல் ரோஸ்ட் செய்து வருகின்றனர். ஆனாலும் நிகழ்ச்சிக்கு சில ரசிகர்கள் சப்போர்ட் செய்தும் வருகின்றனர். அந்த வகையில் நேற்று கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார்.

கிட்டத்தட்ட 76 நாட்கள் அவர் அந்த வீட்டில் இருந்திருக்கிறார். ஆனாலும் சொல்லிக் கொள்ளும்படியான பெரிய சம்பவங்கள் எதுவும் செய்யவில்லை. பிரதீப் ரெட் கார்டு விவகாரத்தில் பிள்ளையார் சுழி இவர் போட்டிருந்தாலும் மாயா அதை அப்படியே டேக் ஓவர் பண்ணி ஸ்கோர் செய்துவிட்டார்.

Also read: பிக் பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு கமல் மேல் அப்படி என்னதான் காண்டு?. மனப்பாடம் பண்ணி மாட்டிக்கொண்ட ஆண்டவர்

அதை அடுத்து அவ்வப்போது இவர் விசித்ராவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவார். அதைத் தாண்டி பெரிய அளவில் இவரால் நிகழ்ச்சியின் போக்கு மாறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இதை ஆண்டவரே கடந்த வாரம் வெளிப்படையாக சொல்லி இருந்தார்.

இருந்தாலும் டாஸ்க்குகளில் இவருடைய ஈடுபாடு குறைவாகத்தான் இருந்தது. யாருக்கு வந்த விருந்தோ என பிக் பாஸ் வீட்டில் இவர் பொழுதை ஓட்டியது சில விமர்சனங்களுக்கும் ஆளானது. ஆனாலும் இவர் 76 நாட்கள் வரை வீட்டில் தாக்குப் பிடித்து விட்டார்.

அந்த வகையில் இவருக்கு வாரத்திற்கு 1.5 லட்சம் சம்பளமாக பேசப்பட்டிருந்தது. அதை வைத்து பார்க்கும் போது 76 நாட்களுக்கு கூல் சுரேஷ் கிட்டத்தட்ட 15 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். சும்மா இருந்ததற்கே இவ்வளவா என இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் தற்போது ஆச்சரியத்தில் உறைந்து போய் இருக்கின்றனர்.

Also read: ஆண்டவரை அஸ்தமனம் ஆக்கிய பிக் பாஸ்.. சிஷ்யன் வாங்கி கொடுத்த பெயரை மொத்தமாய் காலி செய்த கமல்

Trending News