5 வருடத்திற்கு அப்புறம் என்ட்ரி கொடுக்கும் கிராக் ஹீரோயின்.. சிம்பு போல் கேரியரை மீட்டெடுத்த நடிகை

சிம்பு இடையில் கொஞ்சம் அப்படி இப்படி இருந்து பல பேருடைய பேச்சுக்களுக்கு ஆளானார். அதேபோல் பழைய ஆறடி ஹீரோயின் ஒருவர் பட்ட அடியால் இப்பொழுது திரும்பி தன்னுடைய கேரியரை சினிமாவில் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அந்த ஹீரோயின், திடீரென ஷூட்டிங் ஸ்பாட்டில் அழுவதும், சிரிப்பதுமாய் வித்தியாசமாக நடந்து கொள்வார்ராம் . வெளியூருக்கு சூட்டிங் சென்றாலும் திடீரென எஸ்கேப் ஆகி விடுவாராம். எங்கே சென்றுள்ளார் என்பது யாருக்கும் தெரியாதாம்.இவரால் பல நாள் சூட்டிங்பல கேன்சல் ஆகி இருக்கிறது.

சூர்யா, விஜய் போன்ற பெரிய ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நல்ல ஹோம்லி நடிகை என கொண்டாடப்பட்ட இவர் இடையில் சினிமாவை விட்டே காணாமல் போனார். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார். இப்பொழுது கைவசம் நிறைய படங்கள் குவித்து வைத்துள்ளாராம்.

சிம்பு போல் கேரியரை மீட்டெடுத்த நடிகை

பத்ரி, ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் கலக்கிய பூமிகா சாவ்லா இப்பொழுது பல படங்களில் கமிட்டாகி வருகிறார். பிரதர், ஸ்கூல், என தமிழ் படங்களிலும். தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சனைகள் செய்தவர் இன்று எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் பெயரை காப்பாற்றுகிறார்.

ஸ்கூல் என்ற தமிழ் ஹாரர் படத்தில் தற்போது நடித்து வருகிறார். சரத்குமாரை வைத்து வைத்தீஸ்வரன் படத்தை எடுத்த இயக்குனர் வித்யாதரன் இந்த படத்தை இயக்குகிறார். 4 வயது மகனுடன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த பூமிகா பையனுக்கு உடம்பு சரியில்லாத போது கூட ஷூட்டிங்கிற்க்கு எந்த இடையூறும் தருவதில்லையாம்.

பூமிகா தமிழில் கடைசியாக 2019 ஆம் ஆண்டு கொலையுதிர் காலம் படத்தில் நடித்தார். இவருக்கு தோனி படத்திற்கு பின் எந்த படமும் போடவில்லை ஏற்கனவே இவர் “யு டர்ன்” என்ற ஹாரர் படத்தில் நடித்திருந்தார். இப்பொழுதும் பேய் படங்களை தேர்ந்தெடுப்பதில் அதிக நாட்டம் காட்டுகிறார்.

thenmozhi

Thenmozhi

தேன்மொழி - கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான செய்திகளை எழுதி வருகிறார். OTT செய்திகள் மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →