சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

செஸ் ஒலிம்பியாட்டில் அசத்தல்.. அமெரிக்காவை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா.. குவியும் பாராட்டுகள்!

ஹங்கேரியில் செஸ் ஒலிம்பியாட் 2024 போட்டி நடந்து வருகிறது. இதில், இந்திய அணி தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஹங்கேரி நாட்டில் 45 வது -செஸ் ஒலிம்பியாட் தொடர் நடந்து வருகிறது.இப்போட்டியில், 11 சுற்றுகள் உள்ள நிலையில், இந்தியா இதுவரை நடைபெற்ற 8 சுற்றுகளில் அசத்தல் வெற்றி பெற்றது.இதையடுத்து, நடைபெற்ற 9வது சுற்றில், உஸ்பெகிஸ்தான் அணியுடன் போட்டியிட்டு, அதில் சமனானது. இதைத்தொடர்ந்து, 10 வது சுற்றில், இந்திய அணி அமெரிக்காவை எதிர்கொண்டது.

இதில், இந்திய அணி 2.1-1.5 என்ற பாயிண்ட் கணக்கில் வெற்றியை வசமாக்கியது. இதில் முதல் போட்டியில் இந்திய வீரர் டி.குகேஷ், பேபியானோ கருவானாவை வீழ்த்தியது மகிழ்ச்ச்சியை அளித்தாலும், மற்றொரு இந்திய நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா, அமெரிக்கா வீரர் வெஸ்லிசோவிடம் தோல்வியடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், இறுதிப் போட்டியில், அமெரிக்காவின் லெனியர் டோமிங்குயியை இந்தியய் வீரர் அர்ஜுன் எரிகாய் வீழ்த்தி வெற்றி பெற்றார். எனவே இந்திய அணி தற்போது 19 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.தொடர்ந்து சீனா 17 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும், ஸ்லோவேனியா 3 வது இடத்திலுள்ளன.அடுத்து நடக்கவுள்ள 11 வது சுற்றில், ஸ்லோவேனியா, சீனா மற்றும் அமெரிக்காவை எதிர்கொள்ள இருந்தது இந்தியா.

இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால், ஒருவேளை இந்திய அணி தோற்று, சீனா வென்றால், இரு அணிகளும் முதல் இடத்தை பிடிக்கும். இதையடுத்து, டைபிரேக்கர் வாய்ப்பில் யார் வெற்றி பெறுவது என்பது தீர்மானிக்கப்படும். இப்போட்டியில் இந்தியா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்க வேண்டும் என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில், ஹப்கேரியில் நடந்த 45 வது -செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஸ்ரீ நாத் நாராயணன் தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இதில், குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூன், எரிகைசி, ஹரிகிருஷ்ணா, விதி குஜ்ராத்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

மேலும், இந்திய ஆடவர் அணி தங்கம் வென்றிருந்த நிலையில், இந்திய மகளிர் அணியும் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News