வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கிரேசி மோகனின் மறக்க முடியாத 7 படங்கள்.. கமலஹாசனுக்கு மட்டும் இத்தனை ஹிட் படங்களா.?

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே. நமது வலைதளம் வாயிலாக பல சுவையான சினிமா செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் மறைந்த கிரேசி மோகன் அவர்களின் சிறந்த 7 படைப்புகளை பார்க்கலாம். கிரேசி மோகன் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தா. இவர் அதிகம் பயணம் செய்தது நடிகர் கமல்ஹாசன் உடன். அபூர்வ சகோதரர்கள் படம் மூலம் தொடங்கிய அவர்களது கூட்டணி இறுதி நாட்கள் வரை சென்றது.

மைக்கல் மதன காம ராஜன்: அபூர்வ சகோதரர்கள் படத்திலேயே வில்லன்களிடம்தென்படும் நகைச்சுவைக்கு காரணம் இவரது எழுத்துக்கள் தான். அடுத்த கமல் படமான மைக்கல் மதன காம ராஜன் படத்தில் கமலுக்கு 4 வேடங்கள். படம் முழுக்க நகைச்சுவை ததும்பும் கதையம்சம். சொல்லவும் வேண்டுமா? கிரேசி மோகன் புகுந்து விளையாடி இருப்பார். நான்கு கதாபாத்திரத்திற்கும் வித்தியாசம் இருப்பதை வசனத்திலும் கொண்டு வந்திருப்பார். இந்த படத்தில் மளிகை கடை நடத்துபவராக நடித்தும் இருப்பார்.

சின்ன வாத்தியார்: கமல் ஹாசன் படங்களை தவிர்த்து பார்த்தால் இவரது ஒரு சில படங்கள் மட்டுமே நமக்கு மனதில் நிற்கும். அந்த வகையில் பிரபு, குஷ்பு, கவுண்டமணி, செந்தில், நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் நிச்சயம் நம் மனதில் இருக்கும். கிரேசி மோகன் எழுதிய மாது +2 நாடக நகைச்சுவையை அடிப்படையாக கொண்டு செந்தில், கவுண்டமணி செய்யும் காமெடி ஓர் சரவெடி. மேலும் கூடு விட்டு கூடு பாயும் கதை என்பதால் இந்த படம் சிரிப்புக்கு கேரண்டி

அவ்வை சண்முகி: கமல் ஹாசன், கே.எஸ்.ரவிகுமார் இணைந்த அவ்வை சண்முகி, மிசஸ் டவுட்ஃபயர் படத்தின் தழுவல். அதனை மேலும் எழுதி கதை அமைத்து இருந்தார்கள். வசனம் நம்ம கிரேசி மோகன். கேட்கவா வேணும். மாமி வேடத்தில் கமல், அதற்கு ஏற்றார் போல வசனங்களும் செம்மயா அமைந்தது. வார்த்தை ஜாலத்தை இந்த படத்தில் முழுவதுமாக வெளிப்படுத்தி இருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்திற்கு தேவா இசை. மீனா, ஜெமினி கணேசன், டெல்லி கணேஷ், நாசர் உட்பட பலர் நடித்திருந்தனர்.

அருணாச்சலம்: முதல் முறையாக ரஜினிகாந்த், சுந்தர் சி கூட்டணியில் அருணாச்சலம் படத்திற்காக இணைந்தார் கிரேசி மோகன். இந்த படம் முழுக்கவே நகைச்சுவை மற்றும் அதிரடியான திரைக்கதை கொண்டது. அதனை சரியாக பயன் படுத்தி வசனத்தை எழுதி இருந்தார். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி. அதில் மோகன் அவர்களின் பங்கு நிச்சயம் உண்டு.

இரட்சகன்: முதல் முறையாக இந்த வரிசையில் ஒரு தோல்விப்படம். இந்த படத்தை பிரவீன் காந்தி இயக்கி இருந்தார். ரகுமான் இசை அமைத்து இருந்தார். நாகர்ஜுனா, சுஷ்மிதா சென் நடித்த இந்த படம் அப்போதே 10 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டது. மேலும் இரண்டு கோடி செலவிட்ட கே.டி. குஞ்சுமோன் இந்த படத்தால் பலத்த அடி வாங்கினார். கிரேசி மோகனால் கூட இந்த படத்தை எந்த வகையிலும் காப்பாற்ற முடியவில்லை.

காதலா காதலா, தெனாலி, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா MBBS: இந்த 5 படங்களும் வசனங்களால் பெயர் பெற்றவை. நாளுமே கமல் ஹாசன் உடன் அமைத்த கூட்டணி. பல பொதுவான ரசிகர்கள் கூட தங்கள் நெஞ்சில் எப்போதும் நினைத்திருக்கும் நகைச்சுவை படங்கள் எனலாம். ஒன்றுக்கு ஒன்று சலைத்pததில்லை. இந்த ஐந்து படங்களையும் நிச்சயம் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

நான் ஈ: தெலுங்கு படமான நான் ஈ படத்தை ராஜமௌலி இயக்கி இருந்தார். ஈ பழி வாங்கும் இந்த படத்தில் சமந்தா, சுதீப், நானி, சந்தானம் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிட கிரேசி மோகனை விட சிறந்த வசனகர்த்தா இருக்க முடியாது. இந்த படம் முழுக்க வசனங்கள் ஆதிக்கம் செலுத்தின. குறிப்பாக சுதீப் ஈயிடம் மாட்டிகொண்டு படும் பாட்டை அருமையாக வசனங்களில் கொண்டு வந்து இருப்பர், கிரேசி மோகன்.

Trending News