புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பௌண்டரி அடிச்சிட்டு உடனே மரணித்த கிரிக்கெட் வீரர்.. இப்படி கூட மைதானத்தில் மரணம் வருமா?

எந்த நேரத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்பது இன்று வரை புரியாத புதிர் தான். நன்றாக பேசிக் கொண்டே இருப்பார்கள் திடீரென அவருக்கு ஏதாவது உடல் உபாதைகள் ஏற்பட்டு பெரிய தர்ம சங்கடத்திற்கு ஆளாகி விடுவார்கள். இதேபோல் பலர் மரணித்தும் உள்ளனர்.

30 வயதை தாண்டி விட்டது என்றால் ஒவ்வொருத்தரும் தங்களது உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டும். இளம் வயதில் கூட தற்போது ஹார்ட் அட்டாக் போன்ற இதய பிரச்சினை வருகிறது. சிறுவயதில் கூட இந்த பிரச்சனை எழுகிறது. இப்பொழுது அதை போல் தான் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன் விளையாடும் மைதானத்திலேயே மரணித்துள்ளார்.

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் திடீரென மைதானத்திலேயே மரணித்துள்ளார். அதற்கு முன்னர் அவர் பவுண்டரிகளை அடித்தார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த போது ஏதோ அசம்பாவிதம் அவருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

நடுவர்களிடம் சென்ற அவர் தனக்கு பிரச்சனை இருக்கிறது அதனால் வெளியேறுகிறேன் என கூறிவிட்டு நடையை கட்டியுள்ளார். அப்பொழுது திடீரென சரிந்து விழுந்து சுயநினைவை இழந்தார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள கார்வேர் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி போட்டியில் 35 வயது மதிக்கத்தக்க வீரர் இம்ரான் பட்டேல் தான் ஹார்ட் அட்டாக் வந்து இறந்துள்ளார்.

விளையாடிக்கொண்டிருந்த அவர் அசௌரியத்தை உணர்ந்து அம்பையர்கள் இடம் கூறி ரிட்டையர்டு ஹர்ட் ஆனார். ஆனால் மைதானம் விட்டு வெளியே செல்வதற்குள் மயங்கி விழுந்து இறந்து விட்டார். சக வீரர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர் இருந்தும் கூட அவர் இறந்து விட்டார் என மருத்துவர்கள் உறுதி செய்தனர்

Trending News