Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கிரிக்கெட் வீரர் நடராஜன் அஜித்தும் சந்தித்த காரணம்.. போற இடத்துல எல்லாம் கொக்கி போடும் AK

கிரிக்கெட் வீரர் நடராஜன் அஜித்தும் சந்தித்த காரணம்.. போற இடத்துல எல்லாம் கொக்கி போடும் AK

Ajith and Cricket player Nadarajan: அஜித்தை பொருத்தவரை படம் நடிப்பது வெறும் டைம் பாஸ்க்கு மட்டும் தான். எப்பொழுது தோன்றுதோ அப்பொழுது நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தலாம் என்ற ஒரு ஃபார்முலா படி நடித்துக் கொண்டு வருகிறார். அதே […]

Ajith and Cricket player Nadarajan: அஜித்தை பொருத்தவரை படம் நடிப்பது வெறும் டைம் பாஸ்க்கு மட்டும் தான். எப்பொழுது தோன்றுதோ அப்பொழுது நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தலாம் என்ற ஒரு ஃபார்முலா படி நடித்துக் கொண்டு வருகிறார்.

அதே மாதிரி உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் எதிலும் தலையிடாமல் எனக்கென என்று ஒதுங்கியே வருகிறார்.

இப்படி ரசிகர்களிடமிருந்து ரொம்ப தூரமாக அஜித் விலகி இருந்தாலும், ரசிகர்கள் இவரை ஒருபோதும் கைவிடுவதில்லை.

இப்போது வரை அஜித்துக்கு ரசிகர்கள் மத்தியில் தனி இடம் உண்டு. அந்த வகையில் கடந்த வருடம் துணிவு பணத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் விடாமுயற்சிக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால் படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நிலைமையில் மொத்த பட குழுவும் பம்பரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இது சம்பந்தமாகஹைதராபாத்தில் தற்போது படப்பிடிப்பு போய்க்கொண்டிருக்கிறது. அதனால் அங்கே ஒரு பெரிய ஹோட்டலில் அஜித் தங்கி இருக்கிறார்.

கிரிக்கெட் வீரருடன் நேரத்தை செலவழித்து அஜித்

அதே ஹோட்டலில் தான் சிஎஸ்கே அணி மற்றும் ஹைதராபாத் அணியில் உள்ள வீரர்கள் அடுத்த மேட்ச்காக தங்கி இருக்கிறார்கள்.

மேலும் அஜித்துக்கு பார்க்கும் பிசியோதெரபிஸ்ட் தான் ஹைதராபாத் டீமில் இருப்பவர்களுக்கும் பிசியோதெரபி செய்து வருகிறார். அதனால் இந்த காரணத்திற்காக அஜித் மற்றும் ஹைதராபாத் டீம் அணியில் இருப்பவர்கள் அடிக்கடி சந்தித்து இருக்கிறார்கள்.

இந்த சமயத்தில் தான் ஹைதராபாத் டீமில் இருக்கும் கிரிக்கெட் வீரர் நடராஜுக்கு இன்று பிறந்தநாள். அதனால் பிறந்த நாளை கொண்டாடும் ஃபங்ஷனுக்கு அஜித்தை அழைத்து இருக்கிறார்கள்.

அஜித்தும் அதில் கலந்து கொண்டு கிரிக்கெட் வீரருடன் சேர்ந்து கேக் வெட்டி ஒன்றாக இருந்த போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அஜித் படம் வெளிவருகிறதோ இல்லையோ போற இடத்தில் முக்கியமான பிரபலங்களுடன் சேர்ந்து நேரத்தை செலவழிக்கும் விஷயங்களை வெளியிட்டு வருகிறார்.

எது எப்படியோ கிரிக்கெட் வீரர்களுடன் அஜித்துக்கு ஒரு நல்ல பழக்கம் ஏற்பட்டதையொட்டி சந்தோஷத்தில் இருக்கிறார்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.