சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற கமலின் 6 படங்கள்.. வசூல் ரீதியாக மண்ணைக் கவ்விய லிஸ்ட்

Actor Kamal Low Collection Movie: பொதுவாக கமல் படம் என்றாலே அது சற்று வித்தியாசமாகவும், இவருடைய காலங்களுக்குப் பிறகும் பேசக்கூடிய படமாக தான் இருக்கும். அதுதான் வரலாற்று சாதனையான விஷயம் என்று சொல்லலாம். எப்பொழுதுமே ஒரு விஷயம் வெளிவரும் பொழுது அதனுடைய அருமை உடனே புரியாது காலம் போக போக தான் அதனுடைய தாக்கம் அதிகரிக்கும். அது போல கமல் நடிப்பில் வெளிவந்த ஆறு படங்கள் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும் வணிக ரீதியாக சராசரி லாபத்தை பெற்றிருக்கிறது. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.

நாயகன்: மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படம் கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகி இருக்கிறது. ஆனால் இப்படம் வெளிவந்த பொழுது விமர்சன ரீதியாக வெற்றி அடைந்தாலும் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. ஆனாலும் காரசாரம் குறையாமல் இன்னும் இதனுடைய தாக்கம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

Also read: பட சம்பவம் போலவே மாறிய அசினின் உண்மை வாழ்க்கை.. சல்மான், கமல் வலை வீசியும் சிக்காத மாமி

பேசும் படம்: சங்கீதம் சீனிவாஸ் ராவ் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1987 ஆம் ஆண்டு பேசும் படம் வெளிவந்தது. இப்படம் எவ்வித உரையாடலும் இல்லாமல் எடுக்கப்பட்ட படமானது. அத்துடன் சிறந்த பொழுது போக்குக்கான திரைப்படமாக வெற்றி பெற்று தேசிய திரைப்பட விருதை வாங்கி கொடுத்தது. ஆனால் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. இருந்தாலும் இது ஒரு சரித்திர படமாக பெயர் பெற்று வருகிறது.

மகாநதி: சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடிப்பில் 1994 ஆம் ஆண்டு மகாநதி திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல், மனைவி இல்லாமல் குழந்தைகளை தனியாக வளர்த்து வருவார். அதன் பிறகு இவருக்கு ஏற்பட்ட பண ஆசையால் நண்பரை நம்பி ஏமாந்து போய் இருப்பார். அதனால் இவருடைய மகளுக்கு ஏற்பட்ட பிரச்சனையை சமாளிக்கும் விதமாக படம் அமைந்திருக்கும். இப்படம் வெளியான போது எதிர்பார்த்த லாபத்தை பெறவில்லை.

Also read: அட ரஜினி, விஜய் கையிலேயே இத்தனை படங்கள் இல்லையே.. கமல் லிஸ்டில் இருக்கும் 4 படங்கள்!

சதிலீலாவதி: இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கத்தில் கமல் நடித்து சதி லீலாவதி திரைப்படம் 1995ஆம் ஆண்டு வெளிவந்தது. இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை மையமாக வைத்து கமலின் வித்தியாசமான நடிப்புடன் வெளிவந்திருக்கும். இப்படம் மக்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. ஆனால் சராசரியான லாபத்தை மட்டுமே பெற்றுக் கொடுத்தது.

அன்பே சிவம்: சுந்தர் சி இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் அன்பே சிவம் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் கம்யூனிசம், நாத்திகம் மற்றும் நற்பண்பு போன்ற கருப்பொருட்களை மையமாக வைத்து வெளிவந்தது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும் பாக்ஸ் ஆஃபீஸில் குறைவான லாபத்தை பெற்றது.

விருமாண்டி: கமல்ஹாசன் இயக்கத்தில் அவருடைய நடிப்பால் 2004 ஆம் ஆண்டு விருமாண்டி திரைப்படம் வெளிவந்தது. இப்படம் இரண்டு சிறை கைதிகளின் வாழ்க்கையை எடுத்துச் சொல்லும் படமாக வெளிவந்தது. இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டை பெற்றாலும் வசூல் அளவில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை.

Also read: சத்யராஜுக்கு தானாக அமைந்த 5 கேரியர் பெஸ்ட் மூவிஸ்.. ரஜினி கமல் போல் இமேஜ் குறையாத மகா நடிகன்

- Advertisement -spot_img

Trending News