சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

சி எஸ் கேவிற்கு கேள்விக்குறியான பிளே ஆப்.. 4 பவுலர்களை நம்பி மோசம் போன தோனி

CSK play off became questioned: சி எஸ் கே அணி 2024 ஐபிஎல் போட்டிகளில் 10 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இதுவரை தான் பங்கேற்ற 10 போட்டிகளில் ஐந்தில் தோல்வியும், ஐந்தில் வெற்றியும் பெற்றுள்ளது. இப்பொழுது பல சிக்கல்களை சந்தித்து மீதம் உள்ள போட்டிகளை கேள்விக்குறியாக்கியுள்ளது சிஎஸ்கே அணி

முதல் நான்கு இடத்தை பிடித்த அணிகள் எல்லாம் 6 போட்டிகளை வென்று 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி மீதமுள்ள நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். சென்னை அணி ஏதாவது ஒரு போட்டியில் சொதப்பினால் கூட இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும். அதாவது மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை கணக்கில் கொண்டே சிஎஸ்கே அணியின் அடுத்த சுற்று தகுதி பெறும்.

4 பவுலர்களை நம்பி மோசம் போன தோனி

இப்பொழுது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருந்து விலகி உள்ளனர். ஏற்கனவே பங்களாதேஷ் அணி வீரர் முஸ்தாபிக் ரஹீம் காயம் காரணமாக ஐபிஎல் இல் இருந்து விலகி விட்டார். அவரைத் தொடர்ந்து தீபக் சஹார்ரூம் விலகி விட்டார்.

இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திர பவுலரான மதிஷா பதிரானா இருபது ஓவர் உலகக் கோப்பையில் பங்கேற்க பாஸ்போர்ட் விசயமாக இலங்கை திரும்பியுள்ளார். அவரும் வேலைகளை முடித்துவிட்டு திரும்புவது கடினம்.

மூன்று பவுலர்களை இழந்த நிலையில் மேலும் பின்னடைவாக காய்ச்சல் காரணமாக தேஷ் பாண்டேவும் விலகியுள்ளார். இப்படி வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் அணியில் இருந்து விலகி உள்ளனர். ஆகையால் சிஎஸ்கே அணி மீதமுள்ள நான்கு போட்டிகளை வெல்வது மிகவும் கடினம். அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறி தான்.

Trending News