வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

IPL 2024 சிஎஸ்கே டாப் 5 வீரர்களின் சம்பள விவரம்.. தோனியை மிஞ்சி சம்பளம் வாங்கும் அந்த வீரர்

CSK players Salary: இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்போதுதான் உலகக்கோப்பை காய்ச்சல் முடிந்திருக்கிறது. அதற்குள் ஐபிஎல் போட்டியின் ஏலம் தொடங்கி அணிகளின் விவரம் வெளியாகி பெரிய பரபரப்பை கிளப்பி விட்டது. கடந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் அணியுடன் போட்டியிட்டு கோப்பையை வென்றது.

சிஎஸ்கே அணியை பொறுத்த வரைக்கும் வெற்றி அல்லது தோல்வி என்பது பெரிய விஷயம் கிடையாது. ஐபிஎல் வந்து விட்டாலே அந்த அணி தான் பெரிய அளவில் வைரலாகும். அதற்கு முக்கிய காரணம் சிஎஸ்கே அணியின் ஆட்டநாயகன் மகேந்திர சிங் தோனி தான். தோனிக்கு போன வருட மேட்ச் தான் கடைசி ஆட்டம் என்று பேசப்பட்டு கொண்டிருந்த நிலையில் தோனி இந்த வருடமும் விளையாடுகிறார்.

Also Read:2024 ஐபிஎல் சென்னை அணி வீரர்கள் விபரம்.. 2 புதுமுக ஆல்ரவுண்டர்களை வளைத்த தல தோனி

தோனியை இனிமேல் கிரிக்கெட்டில் பார்க்க முடியாது என்று எண்ணி கடந்த வருடம் ரசிகர்கள் ஒவ்வொரு ஸ்டேடியத்திலும் கதறி அழுதார்கள். ஆனால் சென்னை அணி மற்றும் தோனி மீது இருக்கும் ரசிகர்களின் அளவு கடந்த அன்பு அவரை இந்த வருடம் விளையாட வைத்திருக்கிறது. சமீபத்தில் சிஎஸ்கே அணியில் விளையாடும் வீரர்களின் சம்பள விவரங்கள் வெளியாகி இருக்கிறது அதை பற்றி பார்க்கலாம்.

சிஎஸ்கே வீரர்களின் சம்பள விவரம்

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரரான மகேந்திர சிங் தோனிக்கு 12 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது. தீபக் சாகர் 14 கோடி சம்பளமாக பெறுகிறார். முக்கிய வீரர் மொயின் அலிக்கு எட்டு கோடி சம்பளமாகவும், அதை தொடர்ந்து சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நாயகனாக இருக்கும் ருத்ராஜூக்கு ஆறு கோடி சம்பளமாகவும் கொடுக்கப்படுகிறது.

கடந்த வருடம் சென்னை அணியின் வெற்றிக்கு பெரிய காரணமாக இருந்தது ரவீந்திர ஜடேஜா தான். அவர் ஆடிய கடைசி இரண்டு பந்துகள் ஐபிஎல் வரலாற்றில் எப்போதுமே இடம்பெற்றிருக்கும். இவருக்கு இந்த வருட சம்பளம் 16 கோடி ஆகும். சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் தோனி யை விட அதிக சம்பளம் வாங்குவது ஜடேஜா தான்.

இவர்களைத் தொடர்ந்து டெவான் கான்வே 1 கோடி, அம்பதி ராயுடு – 6.75 கோடி, சுப்ரான்சு சேனாபதி – 20 லட்சம் , சிவம் துபே – 4 கோடி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் – 1.5 கோடி, டுவைன் பிரிட்டோரியஸ் – 50 லட்சம்,
மிட்செல் சான்ட்னர் – 1.9 கோடி, துஷார் தேஷ்பாண்டே – 20 லட்சம், முகேஷ் சவுத்ரி – 20 லட்சம், மதீஷ பத்திரன – 20 லட்சம், சிமர்ஜீத் சிங் – 20 லட்சம், பிரசாந்த் சோலங்கி – 1.2 கோடி, மகேஷ் தீக்ஷனா – 70 லட்சம், அஜிங்க்யா ரஹானே – 50 லட்சம், பென் ஸ்டோக்ஸ் – 16.25 கோடி, ஷேக் ரஷீத் – 20 லட்சம், நிஷாந்த் சிந்து – 60 லட்சம், கைல் ஜேமிசன் – 1 கோடி, அஜய் மண்டல் – 20 லட்சம், பகத் வர்மா – 20 லட்சம் சம்பளமாக பெறுகிறார்கள்.

Also Read:ஆஸ்திரேலியா அணி வீரர் செய்த திமிர்த்தனம்.. உலகக் கோப்பை சர்ச்சையால் விளையாட தடை

- Advertisement -spot_img

Trending News