சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியித் தொகுப்பாளராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2012 ஆம் ஆண்டு மெரினா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.
அதன்பின்னர், தனுஷ் நடிப்பில், ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தின் காமெடி நடிகராக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இப்படத்தை அடுத்து, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற படங்களில் நடித்தவர் எதிர் நீச்சல் மூலம் தனிக்கவனம் பெற்றார்.
அதன்பின்னர், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் அவருக்கு பிரேக் கொடுத்தது. இதையடுத்து, மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், உள்ளிட்ட ஹிட் படங்கள் கொடுத்து, இன்று பிரபல நடிகராக உள்ளார். ஹிட் படங்கள் கொடுத்தாலும், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
சிவகார்த்திகேயன் நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் எனப் பன்முகக் கலைஞராக இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் எந்தப் பின்புலனும் இல்லாமல் சின்னத்திரையில் இருந்து, சினிமாவில் அடியெடுத்துவைத்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்தப் பத்தாண்டுகளில், அவரது வெற்றி அசுரத்தனமானது என்றாலும் அதில் சறுக்கல்களையும் சந்தித்துள்ளார். அதேச்சமயம் சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார்.
ஆரம்பத்தில் தன்னை வேலை செய்யவிடாமல் தடுப்பதாக மேடையில் புகார் கூறியவர் சுயமாக முன்னேறி இன்று தயாரிப்பாளர்களுக்கு பொன்முட்டையிடும் வாத்தாக உள்ளார். விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களே சொந்தப் படம் தயாரித்து சூடுப்பட்டுக்கொள்ளாத நிலையில், சிவகார்த்திகேயன் தன் சொந்தத் தயாரிப்பில் சில படங்கள் எடுத்தார்.கனா, கொட்டுக்காளி உள்ளிட்ட படங்கள் மூலம் தன் நண்பர்களையும், புதுமுக கலைஞர்களையும் ஊக்குவித்து வருகிறார்.
அப்படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும், கருடன் படத்தின் மூலம் ஹீரோவாக பீக்கில் என்ற சூரியை அவர் பழிவாங்கிவிட்டதாகவும் மீம்ஸ்கள் உலாவந்தன. தன் படங்கள் மூலம் பல கோடிகள் அவருக்குக் கடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அயலான் பட ரிலீஸின்போதே அவரது தலையில் எண்பத்தைந்து கோடி கடன் சுமை இருந்ததாக தகவல் வெளியானது. இதுஒரு புறமிருக்க, டி இமானின் மனைவி மோனிகா ரிச்சர்டுடன் சிவகார்த்திகேயன் இணைத்துப் பேசப்பட்டார்.
தனது பல படங்களுக்கு ஹிட் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்கள் போட்டுக் கொடுத்த இமான் தன்னை தம்பியாக நினைத்த நிலையில், அவரது மனைவியை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் காரணம் என்ற பேச்சு எழுந்தது. இமானும் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைக்க மாட்டேன் என்றார்.
இவ்விவகாரம் சமீபத்தில் சோசியல் மீடியால் பரவி அவரது கேரியரை ஆட்டம் காணும் அளவுக்குச் சென்ற நிலையில், அவர் தனது ஐடி டீமை வைத்து நெகட்டிவ் செய்திகளுக்குப் பதிலாக பாசிட்டிவ் வீடியோக்கள், செய்திகளைப் பரவவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் நல்ல இமேஜை மெடிண்டன் செய்த சிவகாவுக்கு இது மாறாத தழும்பாக மாறிவிட்டது.
பல சர்ச்சைகளைத் தாண்டி, சிவகார்த்திகேயன் இன்று தனக்கென சினிமாவில் தனியிடம் பிடித்துள்ளார். ரசிகர்களையும், இளைஞர்களையும் குழந்தைகளையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். கோட் படத்திலும் விஜய் அரசியலுக்குப் போனால் சினிமாவை தான் பார்த்துக் கொள்வதுபோன்ற மறைமுக வசனமும் இடம்பெற்றிருந்தது. தற்போது கமல் தயாரிப்பில் அமரன் படத்தில் நடித்துள்ளார். மேலும், ஏ.ஆர். முருகதாஸின் ஒரு படத்திலும் நடித்துவருகிறார்.
சினிமாவில் சோதனை, பொறாமை, கடன், சர்ச்சை என இருந்தாலும் குறுகில காலத்தில் சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சியை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். இதெல்லாம் தாண்டி தற்போது தளபதி தன்னுடைய சினிமாவிற்கான இடத்தை நீ பார்த்துக்கொள் என்பதை நாசுக்காக கோட் படத்தில் கூறியிருக்கும் காட்சி திரையுலகத்தை அதிர வைத்தது.