புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அப்பா அப்பான்னு சொல்லி ஜீவானந்தத்திற்கு ஆப்பு வைத்த தர்ஷினி.. குணசேகரனுக்கு சாதகமாக மாறிய வாரிசு

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரனின் கொடூரமான நடிப்பை கூட சகித்து விடலாம். ஆனா பாசக்கார அப்பாவாக நடிப்பதை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அந்த அளவிற்கு ஒரு டிராமாவை போட்டு அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றுகிறார்.

இவருக்கு ஏற்ற மாதிரி தர்ஷினியும், மருத்துவமனையில் மயக்க நிலையில் இருப்பதால் அப்பா அப்பா என்னை காப்பாற்றுங்கள் என்று புலம்பி தவிக்கிறார். இதை பார்த்து அங்க சுற்றி இருப்பவர்கள் அனைவரும் குணசேகரன் மீது இவ்வளவு பாசமா? அப்பா வந்து தன்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் பாவம் தர்ஷினி பினாத்துகிறார் என்று ஒரு பக்கம் கதை திரும்பிவிட்டது.

ஓவர் டிராமா நடத்தும் குணசேகரன்

இது என்னடா எதிர்நீச்சலுக்கு வந்த சோதனையா என்பதற்கு ஏற்ப, குணசேகரனும் அப்படியே உருகி உருகி நான் பெத்த மகளே தர்ஷினி, உன் பக்கத்தில் தான் இருக்கிறேன். பயப்படாதே நான் உன்னை பார்த்துக்கொள்கிறேன் என்று டயலாக் விட்டு தள்ளுகிறார். ஆனால் உண்மையில் தர்ஷினி அப்பா அப்பான்னு சொன்னது ஜீவானந்தத்தை தான்.

அதை புரிந்து கொள்ளாமல் மற்றவர்களும் குணசேகரன் என்னமோ உத்தமன் போல ஓவர் ஆக்டிங் பண்ணி வருகிறார்கள். ஆனால் தர்ஷினி, ஜீவானந்தத்தை அப்பா அப்பான்னு சொல்லி மொத்த ஆப்பையும் அவர் மீது வைத்து விட்டார்.

இதற்கிடையில் கடத்தி வைத்திருக்கும் பொழுது குணசேகரன் பேசிய விஷயங்கள் அனைத்தையும் தர்ஷினி மறந்து விட்டார். இதையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது ஜீவானந்தம் தான் உண்மையான குற்றவாளி என்று முடிவு பண்ணிவிட்டார்.

அந்த வகையில் இவரை சூட்டிங் பண்ணியாவது பிடித்து விட வேண்டும் என்று பிளான் பண்ணிவிட்டார். அடுத்ததாக ஈஸ்வரியை கோர்ட்டுக்கு கூட்டிட்டு வருகிறார்கள். இதில் எப்படியாவது ஈஸ்வரி அக்கா வெளியே வந்து விடுவார் என்று ஜனனி முயற்சி பண்ணுகிறார்.

ஆனால் ஜீவானந்தம் போலீஸிடம் சிக்கவில்லை என்பதால் ஜாமின் கிடைப்பது சந்தேகம்தான். இதற்கெல்லாம் ஒரே தீர்வு தர்ஷினி கண்விழித்து நடந்த உண்மை அனைத்தையும் சொன்னால் மட்டும் தான் இந்த நாடகத்துக்கு மட்டும் இல்லை இதை பார்க்கிற நமக்கும் ஒரு விமோசனம் கிடைக்கும்.

Trending News