திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 7 படங்கள்.. நெட்பிளிக்ஸுக்கு வரும் அமரன்

December First Week OTT Release Movies : ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் நிறைய படங்கள் வெளியாகி வருகிறது. இந்த வாரம் தியேட்டரிலும் பெரிதாக எதிர்பார்த்த புஷ்பா 2 படம் வெளியாகும் நிலையில் ஓடிடியிலும் எக்கச்சக்க படங்கள் வெளியாகிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் அக்டோபர் மாதம் வெளியான படம் தான் அமரன். இந்த படம் தியேட்டரில் நல்ல வசூலை பெற்ற நிலையில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாசன் பாலா இயக்கத்தில் உருவான ஜிக்ரா படம் அக்டோபர் 11 தியேட்டரில் வெளியானது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்ற நிலையில் டிசம்பர் 6 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. மேலும் இதே தளத்தில் விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ வெளியாகிறது.

டிசம்பர் முதல் வாரம் வெளியாகும் படங்கள்

இதில் விஜய் ராஸ் மற்றும் மல்லிகா ஷெராவத் ஆகியோர் நடித்திருக்கின்றனர். தேசிய விருது இயக்குனர் ராகுல் தோலாக்கியா இயக்கத்தில் அக்னி படம் உருவாகி உள்ள நிலையில் இந்த படம் அமேசான் பிரைமில் வெளியாகிறது. இதில் பிரதிக் காந்தி மற்றும் திவ்யேந்து நடித்துள்ளனர்.

இப்படம் தீயணைப்பு வீராங்கனை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக டிசம்பர் 5 அமேசான் ப்ரைம் வீடியோவில் வருண் தேஜா கதாநாயகனாக நடித்துள்ள மட்கா படம் வெளியாகிறது. அடுத்ததாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் தனவ் சீசன் 2 வெளியாகிறது.

மேலும் திகில் படமான லைட் ஷாப் படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஸ்ட்ரீம்ங் ஆகிறது. பிளாக் டவுஸ் படம் டிசம்பர் 5ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. ஆகையால் இந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் பெரிதும் எதிர்பார்த்த இந்த படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

Trending News