புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மார்க்கெட் இல்லாததால் அதை பாதியாக குறைத்த சிவகார்த்திகேயன் பட நடிகை.. நல்ல முடிவு

விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் ஆகவும் இருந்து கொண்டிருந்த நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக தூக்கிவிட்ட படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரீ திவ்யா.

சினிமாவில் கதாநாயகியாக ஸ்ரீ  திவ்யா அறிமுகமாவதற்கு முன்பே தெலுங்கு சீரியல்களில் நடித்து கொண்டிருந்த பிறகே, அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவ்வாறு சீரியலில் நடித்ததன் மூலம் படிப்படியாக சினிமாவில் நுழைந்த போது, ஸ்ரீ திவ்யா ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது.

குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை தொடர்ந்து காக்கி சட்டை, ஜீவா, வெள்ளைக்கார துரை, ஈட்டி உள்ளிட்ட படங்கள் அனைத்தும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியை ஸ்ரீ திவ்யாவிற்கு பெற்றுத்தந்தது. அதன் காரணமாகவே இவர் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருந்தார்.

அந்த சமயத்தில் தன்னைத் தேடி வந்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் சம்பள விஷயத்தில் கறாராக பேசிய ஸ்ரீ திவ்யா, அதன் பிறகு இவர் நடித்த ஒரு சில படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்ததால் படவாய்ப்புகள் முற்றிலுமாக குறையத் தொடங்கிவிட்டது.

இவ்வாறு மீண்டும் சினிமாவில்  கால் பதிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் வந்துவிட்டதால் வெள்ளித்திரையில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சம்பளத்தை பாதியாக குறைத்து வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார். இதையறிந்த இளம் நடிகைகள் பட வாய்ப்பிற்காக அநியாயத்திற்கு சம்பளத்தை குறைத்து விட்டாரே என புலம்புகின்றனர்.

எனவே ஸ்ரீ திவ்யாவின் இந்த மாறுதல் சினிமாவில் அவரை மீண்டும் வர வைப்பது என்பது தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் கையில்தான் இருக்கிறது. இதற்காகத்தான் ‘ஓவரா ஆடக் கூடாது’ என நெட்டிசன்கள் ஸ்ரீ திவ்யாவை சோசியல் மீடியாவில் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

Trending News