திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோ படத்தில் கண்டிப்பாக கமலஹாசன்.. சர்ப்ரைஸாக கொடுக்க இயக்குனர் போட்ட பிளான்.!

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்திற்கான படப்பிடிப்பு காஷ்மீரில் மும்பரமாக நடைபெற்று வருகிறது. இது பான் இந்தியா படமாக உருவாக்கப்படுகிறது. அதனால் இந்த படத்தில் நடிக்க இருக்கும் முன்னணி நடிகர்கள் அவர்களுக்கான சூட்டிங்கை லோகேஷ் ஒவ்வொரு வாரமாக பிரித்துக் கொண்டு அவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார். மேலும் லியோ படம் LCU கதையாக இருக்கலாம் என்று எதிர்பார்த்த நிலையில் லோகேஷ் அப்படி இருக்காது என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார்.

ஆனால் பொதுவாக லோகேஷின் சிறப்பே இவருடைய படத்தில் கெஸ்ட் ரோல் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்களை யாரையாவது கூப்பிட்டு நடிக்க வைத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதுதான் இவருடைய மிகப்பெரிய வெற்றியின் யுக்தி. அந்த வகையில் இப்பொழுது லியோ படத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு முன்னணி ஹீரோவை கெஸ்ட் ரோல்க்கு நடிக்க வைக்க இருக்கிறார்.

Also read: 500 பேருடன் காஷ்மீரில் மையம் கொண்டுள்ள லோகேஷ்.. பிரம்மாண்டத்தில் ஷங்கரையே மிஞ்சிடுவார் போல!

ஆனால் லியோ படப்பிடிப்பு ஆரம்பிக்கும் போது கமல்ஹாசன் இந்த படத்தில் நடிக்கப் போகிறார் என்று ஒரு புரளி எழுந்தது. ஆனால் அப்படி ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கவில்லை என்று செய்தி மூலம் உறுதி செய்யப்பட்டது. இப்பொழுது மீண்டும் அந்த பேச்சு தொடங்கி இருக்கிறது காரணம் இந்த படத்திற்கான கதையை விவாதிக்கும் போது கமல்ஹாசனை மனதில் வைத்து தான் கதையை தயார் செய்து இருக்கிறார்.

இதனால் படக்குழுவில் உள்ளவர்கள் பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள். ஏனென்றால் கதைப்படி கமல்ஹாசன் நடிப்பதற்கான காட்சிகள் லியோ படத்தில் இருக்கிறது. ஆனால் இப்பொழுது வரை அப்படி ஏதும் காட்சிகள் நடக்கவில்லை, என்றாலும் இனிமேல் அவர் நடிக்க வாய்ப்பு இருக்கலாம். அதையும் இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள்.

Also read: லியோவை மிரட்ட போகும் ரோலக்ஸ்.. சூர்யா 42-வின் வாயை பிளக்க வைக்கும் ப்ரீ ரிலீஸ் வசூல் ரிப்போர்ட்

இப்படி லியோ படத்தில் ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகள் வருவதால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்கிறது. அதனால் கூட கமலின் அப்டேட் குறித்த விஷயங்களை கடைசியாக வைத்துக் கொள்ளலாம் என்று லோகேஷ் முடிவு செய்து இருக்கலாம். இப்படித்தான் லோகேஷ் விக்ரம் படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் கடைசியில் சூர்யா நடிக்கிறார் என்று அவரை தான் கூறினார்.

அது மாதிரி தான் இப்பொழுது லியோ பிடத்திலும் LCU காட்சிகளும் கிடையாது. மற்றபடி கமல்ஹாசனும் இதில் நடிக்கப் போவதில்லை என்று கூறி இருந்தார். ஆனால் இந்த படத்தில் வரும் அப்டேட்டுகள் பார்த்தால் இது LCU கதையாகவும் இருக்கலாம், இந்த படத்தில் கமல்ஹாசன் கண்டிப்பாக நடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கிறது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க லோகேஷ் போட்ட பிளான் ஆக இருக்கலாம்.

Also read: டைட்டில வச்சே பல நூறு கோடி கல்லா கட்டிய லோகேஷின் லியோ.. இந்திய அளவில் எதிர்பார்க்கும் மொத்த வசூல்

Trending News