திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

ரிஷப் பண்ட் உயிர் பிழைத்த திக் திக் நிமிடங்கள்.. போலீசார் கூறிய திகில் அனுபவம்

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய நட்சத்திர வீரர்களில் ஒருவர் ரிஷப் பண்ட். மிகவும் நேர்த்தியாக விளையாடக் கூடிய திறமையானவர். இவருக்கு இன்று அதிகாலை டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மிகப்பெரிய கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இப்போது ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து டில்லி போலீசார் விசாரணை செய்துள்ளனர். இந்த விசாரணையின் போது சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் என்ன நடந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். ரிஷப் பண்ட்டுக்கு விபத்து நடந்த ஒவ்வொரு நிமிடமும் திக் திக் நிமிடங்களாகவே இருந்திருக்கிறது.

Also Read: சோட்டா பையா என்னிடம் வால்லாட்டாதே.. கிரிக்கெட் வீரருக்கு வார்னிங் கொடுத்த அண்ணாச்சி பட ஹீரோயின்

தொடர் போட்டிகளை முடித்த ரிஷப் பண்ட் ஒரு சில சொந்த பணிகளுக்காக டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் வரை சென்று இருக்கிறார். வேலைகளை முடித்த பின் உத்ரகாண்ட்டிலிருந்து டெல்லி திரும்ப வேண்டிய ரிஷப் விமானத்தில் செல்ல விருப்பம் இல்லாமல், கிட்டத்தட்ட 400 கிலோ மீட்டர் பயணத்தை தன்னுடைய காரில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார்.

ரிஷப் ட்ரைவர் இல்லாமல் தானே காரை ஓட்டி வந்திருக்கிறார். அவருடைய தன்னுடைய சொந்த சொகுசு காரில் பயணித்திருக்கிறார். அதிகாலையில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது சாலை பயங்கரமான பனி மூட்டத்துடன் இருந்திருக்கிறது. ரிஷப் பண்ட்டும் சரியான தூக்க கலக்கத்தில் இருந்ததால் கார் தாறுமாறாக சென்றுள்ளது .

Also Read: அதிக சம்பளம் வாங்கும் 5 கிரிக்கெட் வீரர்கள்.. பென்ட்லி, ஆடி நிறுவனம் எல்லாம் இவங்க பாக்கெட்டில்

அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து உண்டான உடனேயே கார் தீப்பிடித்தது. நல்ல வேளையாக கார் தீ பிடிப்பதற்கு முன்பே, பலத்த காயங்களுடன் இருந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் காரிலிருந்து கீழே இறங்கி விட்டாராம். அருகில் இருந்த டீக்கடைக்காரர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினர் உதவிக்கு அழைத்து தான் காரிலிருந்து ரிஷப்பை வெளியில் மீட்டு இருக்கின்றனர்.

ரிஷப்புக்கு கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கிறது. முதலில் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற ரிஷப், இப்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தை முதலில் பார்த்த டீக்கடைக்காரர் மட்டும் இல்லை என்றால் ரிஷப் பண்ட் இன்று உயிரோடு இருந்திருக்க மாட்டார் என்று சொல்கிறார்கள்.

Also Read: ஜொலிக்காமல் போன 5 வாரிசுகள்.. கிரிக்கெட் ஜாம்பவான் அப்பாக்களின் சொதப்பல் மகன்கள்

Trending News