ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

கொஞ்ச, நெஞ்ச பேச்சாடா பேசுன.. டைட்டில் வின்னராக இருந்தும் வாய்ப்புக்காக அலையும் பிக்பாஸ் பிரபலம்

தனியார் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதில் கலந்துக்கொள்ளும் போட்டியாளர்கள் சினிமாவில் வாய்ப்புகளை இழந்தவர்கள், சினிமாவுக்குள் வர துடிப்பவர்கள், தங்கள் மார்க்கெட்டை உயர்த்த நினைப்பவர்கள் தான் அதிகம். அப்படி பல எதிர்பார்ப்புகளை கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்கள் சல்லி சல்லியாய் நொறுங்கி விட்டு தான் செல்வார்கள்.

கிட்டத்தட்ட 6 சீசன்கள் முடிந்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய பல பிரபலங்கள் தற்போது வரை பெரிய பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. அதிலும் 6 சீசன் டைட்டில் வின்னர்கள் எங்கு சென்றார்கள், என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் நிலை உள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிறைவு பெற்றது.

Also Read: கமலுக்கு எதிராக ஹீரோயிசம் காட்டும் அசீம்.. பிக்பாஸ் டைட்டிலுக்கு வர போகும் ஆப்பு

இந்த சீசனில் வரலாறு காணாத வகையில் திருநங்கை ஷிவின் பல ரசிகர்கள் பட்டாளங்கள் பெற்று, 3 ஆம் இடத்தை பிடித்தார். மேலும் இரண்டாம் இடத்தை நடிகர் விக்ரமனும், முதலிடத்தை சின்னத்திரை நடிகர் அசீமும் பெற்றனர். பொதுவாக டைட்டில் வின்னர் யாராக இருந்தாலும், இதுவரை நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் அவர்களை கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சி தான் அடைந்தார்கள்.

ஆனால் இந்த முறை அசிமுக்கு டைட்டில் கொடுக்கப்பட்டதால் பலரும் கொந்தளித்தனர். அதற்கான காரணம், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேர்மையாக விளையாடியதை விட, பலரது மனதை புண்படுத்தும் வகையில் தான் அவரது நடவடிக்கை இருந்தது. முக்கியமாக பெண்களை அவமதிக்கும் வார்த்தைகளை அசீம் அந்நிகழ்ச்சியில் கொட்டி தீர்த்தார். இதன் காரணமாக இவருக்கு கொடுக்கப்பட்ட டைட்டிலை திரும்ப பெற வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினார்.

Also Read: அசீம், விக்ரமன், ஷிவின் என பைனல் லிஸ்ட் வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

இவ்வளவு சர்ச்சைகளுக்கும் நடுவில், தனக்கு வந்த 50 லட்ச ரூபாய் பரிசு தொகையில் 25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு அசீம் கொடுத்தார். இருந்தாலும் இவருக்கான கெட்ட பெயர் தொடர்ந்து கொண்டு வரும் நிலையில், தற்போது அசீம் சினிமாவில் கால் பதிக்க நினைத்து வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார். இதுகுறித்து அசீம் அண்மையில், தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு சினிமாவும், அரசியலும் எனது இரு கண்கள் என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நான் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், யாரேனும் நல்ல கதைகள் வைத்திருந்தால் என்னிடம் கட்டாயம் அணுகுங்கள் என்று கூறி சதாம் என்பவற்றின் பெயரை குறிப்பிட்டு, ஒரு மொபைல் எண்ணையும் பகிர்ந்துள்ளார். மேலும் புதுமுக இயக்குனர்களும் வரவேற்கப்படுகிறார்கள் என்று கொட்டை எழுத்தில் ட்விட் செய்துள்ளார். தற்போது இவரது ட்விட்டை பார்த்த நெட்டிசன்கள் வாய்ப்பு இல்லை என்பதை இப்படிக்கூட சுற்றி வளைத்து சொல்லலாமா என்று கூறி அசீமை கிண்டலடித்து வருகின்றனர்.

Also Read: ரொம்ப தெளிவா உருட்டிய அபுயூஸ் அசீம்.. கொடுத்த வாக்கில் இருந்து பின் வாங்கிய டைட்டில் வின்னர்

Trending News