விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. நாள்தோறும் புது சண்டைகள், குழப்பங்கள் என்று பிக் பாஸ் வீடு களை கட்டிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் பாய்ந்து பிறாண்டி கொண்டிருக்கும் நிலையில் அடுத்ததாக வீட்டுக்குள் ஒரு புது என்ட்ரி வர இருக்கிறது.
கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியான நிலையில் இந்த வாரம் குயின்சி வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். அவரைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக ஒரு சோசியல் மீடியா பிரபலம் வர இருக்கிறார். ஏற்கனவே சோசியல் மீடியாவின் மூலம் பிரபலமான தனலட்சுமி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்.
Also read: மயிரிழையில் உயிர் தப்பிய வாயாடி தனம்.. இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் ஓட்டிங் லிஸ்ட்
தற்போது அவருக்கு போட்டியாக யூடியூப் பிரபலமான ஆல்பர்ட் அஜய் களம் இறங்க இருக்கிறார். யூட்யூபில் இவரும் இவருடைய மனைவியும் சேர்ந்து போடும் வீடியோக்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இவருடைய வீடியோக்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது இவரை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை லட்ச கணக்கில் இருக்கிறது.
ஆல்பர்ட் அஜய்
அதனாலேயே இவர் பிக் பாஸ் வீட்டுக்கு செல்ல இருப்பது ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயத்தை இவர் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். பெங்களூரைச் சேர்ந்த இவர் தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருக்கிறார்.
Also read: போட்டியாளர்களை வதைத்தெடுக்கும் இந்த வார கேப்டன்.. புது புது ரூல்ஸ் போட்டு சாவடிக்கிறாங்க என கதறல்
இன்று இரவு அல்லது நாளை கமல் முன்னிலையில் இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது நிகழ்ச்சி ஆரம்பித்து 50 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் புதிதாக வீட்டுக்குள் நுழைய போகும் போட்டியாளருக்கு ஒவ்வொருவரை பற்றியும் தெளிவாக தெரியும்.
அதனால் அவருடைய இந்த விளையாட்டின் யுக்தி நிச்சயம் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். இதுநாள் வரை தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்கள் இந்த புது வரவை எப்படி சமாளிப்பார்கள் என்பதை நாம் அனைவரும் இனி வரும் நாட்களில் காணலாம். ஆக மொத்தம் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் ரணகளமாக மாற இருக்கிறது.