சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்திற்கு காரணம் சிவகார்திகேயன்தான்.. அட கடவுளே யார நம்புறதுனே தெரியல!

கடந்த 3 வாரங்களாக சமூக வலைத்தளத்தை திறந்தால் நம் கண்களில் அதிகம் படுவது தனுஷ்-ஐஸ்வர்யா பெயர்தான். இவர்களின் விவாகரத்து தொடர்பான பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. அவர்களே ஏண்டா அறிவித்தோம்..? என்று நினைக்கும் அளவிற்கு அதைப் பற்றிதான் அனைத்துத் தளங்களும் பேசி வருகின்றன. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஒருபுறம், மறுபுறம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் , ஆகவே இவர்களுக்கு இடையே பிரச்சனை என்பதால் தான் இந்த பிரச்சனை குரங்கின் வாலில் தீ போல செல்லும் இடமெல்லாம் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது.

தற்போது இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை தனுஷ்- ஐஸ்வர்யா ஆகிய இருவருமே இது குறித்து வாயே திறக்கவில்லை. இந்த நேரத்தில் ‘ 3 ‘ படத்தை தனுஷ் நடிக்க அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் இயக்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் தனுஷ் பள்ளி மாணவனாக நடித்து இருப்பார். மிகுந்த சர்ச்சையான விமர்சனங்களை சம்பாதித்த இந்த படம் அனிருத்தின் இசையால் தப்பித்தது.

அந்த படத்தில் தனுஷின் நண்பராக முதலில் நடிப்பதற்காக நடிகர் சந்தானத்திடம் கேட்கப்பட்டு, சிம்பு – தனுஷ் மோதல் பஞ்சாயத்தால் சந்தானம் ‘ 3 ‘ படத்தில் நடிக்க கூடாது என்று சந்தானத்தின் நண்பர் சிம்பு கூறியதால் சந்தானம் இந்த படத்தில் நடிக்காமல், அப்போது விஜய் டிவி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் நடித்து இருந்தார்.

அதன் பின் சிவாவின் டைமிங் காமெடி எல்லாம், தனுஷ்க்கு மிகவும் பிடித்து போக இருவரும் மிக நெருக்கமான நண்பர்களாக மாறினர். ஒன்றாக வெளியில் போவது, வருவது என ஒன்னுக்குள் ஒன்றாக மாறி விட்டனர். அப்போது தான் தனுஷ் தவளை தன் வாயால் தான் கெடும் என்பது போல நண்பனாக மாறிய சிவாவிடம் , தனுஷ் தன்னுடைய பர்சனல் அனைத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

அவர் எங்கு செல்வார் என்ன செய்வார் என அனைத்தையும் சிவாவிடம் சொல்ல சிவா விளையாட்டுத் தனமாக அத்தனை ரகசியத்தையும் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமாக ஆனதால் தனுஷின் மனைவி ஐஸ்வர்யாவிடம் ஜாலியாகச் சொல்ல அங்குதான் காட்டு தீ பற்ற ஆரம்பித்து இருக்கிறது. விளையாட்டு வினையானது என்பது போல கொஞ்சம் கொஞ்சமாக கணவன் மனைவிக்குள் சண்டை வர ஆரம்பித்து இருக்கிறது. சில நாட்களில் மிகப்பெரிய சண்டையாக முற்றி இருக்கிறது.

இதனால் தான் சிவாவிடம் தனுஷ் கோபித்து கொண்டதாகவும் அதன் பின் தனுஷிற்கும், சிவாவுக்கும் இடையே பஞ்சாயத்து வர இதுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. அதன் பின் நடந்தது எல்லாம் அனைவருக்கும் தெரியும். அன்று சிவகார்த்திகேயன் விளையாட்டாய் செய்த வேலை, அவர்கள் இருவருக்கும் இன்று விவாகரத்து என்னும் நிலைக்கு தள்ளிவிட்டது. அதை மனதில் வைத்துதான் இப்போது தனுஷ் “ஹே இது பொல்லாத உலகம் நீ கொஞ்சம் ஷார்ப்பா இரு ” என்று ஸ்டைலாக மாறன் படத்தில் டான்ஸ் ஆடுகிறார் போல!

Trending News