தனுஷ் கைவசம் வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய படங்கள் உள்ளது. இந்நிலையில் மிகக் குறுகிய காலத்திலேயே தனுஷ் தமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்து மிகப் பெரிய வளர்ச்சி அடைந்துள்ளார். இப்போது தனது சம்பளத்தை தடாலடியாக தனுஷ் உயர்த்தி கேட்டுள்ளாராம்.
அதாவது தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களான ரஜினி மற்றும் விஜய் சம்பளம் 100 கோடியை தாண்டி உள்ளது. இப்போது தனுஷ் ஒரு படத்திற்கு 25 கோடி முதல் 30 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். ஆனால் தனுஷ் தற்போது ஒரு புதிய படத்திற்கு அதிகப்படியான சம்பளம் கேட்பதற்கான காரணம் சிம்பு தானாம்.
Also Read : கோலிவுட்டின் டாப் 10 ஹீரோக்கள் திருமணம் செய்த வயது தெரியுமா.? 21 வயதில் சிம்பு காதலியை தட்டி தூக்கிய தனுஷ்
அதாவது மாநாடு படத்திற்கு பிறகு சிம்புவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சிம்பு ஒரு படத்திற்கு 35 கோடி வரை சம்பளம் கேட்டுள்ளார். ஆகையால் சிம்புவை விட தான் ஜாஸ்தியாக சம்பளம் வாங்க வேண்டும் என்பதற்காக தனுஷ் 40 கோடி சம்பளம் கேட்டுள்ளாராம்.
அதாவது இயக்குனர் நிலன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தான் தனுஷ் 40 கோடி சம்பளம் கேட்டதால் புரொடக்ஷன் டீம் ஆடிப் போய்விட்டதாம். மேலும் தயாரிப்பாளருக்கு ஒரு கணம் நெஞ்சுவலியே வந்திருச்சாம்.
Also Read : ஒரே தலைப்பில் வெளியான 3 படங்கள்.. சிவாஜி டைட்டிலை பயன்படுத்தி ஹிட் அடித்த தனுஷ்
சம்பளத்தை கூட்டி கேட்கலாம் தப்பில்லை, அதற்கென்று இப்படியா என தனுசை பலரும் விமர்சித்து வருகிறார்களாம். ஒரு வகையில் தனுஷை மட்டும் இதில் குற்றம்சாட்டி விட முடியாது. பெரும்பாலான ஹீரோக்கள் தங்களுக்கு போட்டியாக நினைத்துக் கொண்டு மற்ற நடிகர்களை விட அதிகமாக சம்பளம் கேட்டு வருவதாக ஒரு பத்திரிக்கையாளர் தனது வேதனையை கூறியுள்ளார்.
மேலும் இப்படியே போனால் தமிழ் சினிமாவில் படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் ஹீரோக்களின் சம்பளம் தான் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்களின் நிலை என்ன என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. மேலும் பெரிய நிறுவனங்கள் மட்டுமே இனி படங்களை தயாரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.
Also Read : ஒரே வெற்றியால் சுற்றிவரும் அரை டசன் தயாரிப்பாளர்கள்.. அடடே இன்னும் மவுசு குறையாத தனுஷ் படம்