வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிவகார்த்திகேயனால் லலித்துக்கு வந்த ஆப்பு.. அடம்பிடித்து கறாராய் தனுஷ் செய்யும் அக்கப்போரு!

Dhanush is asking for a salary of up to 40 crores for D52: திரைத் துறையில் நடிப்பை கலையாக பாக்காமல் காசாக பார்க்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. மக்களுக்கு நாம் என்ன சொல்ல போகிறோம் என்பது மாறி, மக்களிடம் எவ்வளவு வசூல் ஆகும், அந்த வசூலில் நடித்த நம் பங்கு எவ்வளவு என்று சூப்பராக கணக்கு போட்டு சூப்பர் ஸ்டார்ஸ்  ஆகி வருகிறார்கள் இன்றைய நடிகர்கள்.

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்கள் வாய்ப்பு கிடைக்க போராடி வருகிறார்கள். கிடைத்ததும் முன்னணி நடிகர்களை தூக்கி சாப்பிடும் அளவு கெத்து காமிக்கிறார்கள். முன்னணி நடிகர்களோ இப்ப வந்த நடிகருக்கு இவ்வளவு சம்பளம் என்றால் எனக்கு அதிகம் கொடுக்கக் கூடாதா? என்று கொடி பிடிக்கிறார்கள்.

இவர்களின் சண்டைக்கு தயாரிப்பு நிறுவனங்கள் பலிகடாவாக்கி கடைசியில் யாருக்காக நடிக்கிறார்களோ அவர்களிடமே வசூலை எதிர்நோக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். உதாரணமாக டிக்கெட் விலையை அதிகரிக்கச் செய்வது என தியேட்டர் உரிமையாளர்கள் கொடி பிடிக்கின்றனர். இறுதியில் பாதிக்கப்படுவது தமிழ் சினிமாவும் ரசிகர்களும் மட்டும்தான்.

Also read: கமல், பாக்கியராஜ் செய்த தில்லாலங்கடி வேலை.. வசமாக சிக்கிக்கொண்ட சிவகார்த்திகேயன்

கடந்த பொங்கலுக்கு வெளியான அயலான் மற்றும் கேப்டன் மில்லர் இரு படங்களுமே விமர்சன ரீதியாக சற்றே அடி வாங்கி இருந்தாலும் வசூல் ரீதியாக ஓரளவு தன்னிறைவு பெற்ற நிலையில் இரு நடிகர்களுமே அடுத்த படத்திற்கான சம்பளத்தை அதிரடியாக உயர்த்துகின்றனர்.

அயலான் படத்தின் வெற்றிக்குப் பின் சிவகார்த்திகேயனின் அமரன் பெருமளவு எதிர்பார்க்கப்படும் நிலையில் முந்தைய படத்தை விட அதிகமாக சம்பளம் நிர்ணயித்த சிவகார்த்திகேயனை ஒப்பிட்டு தனக்கும் அதிக சம்பளம் வேண்டும் என அடம் பிடிக்கிறார் தனுஷ். தற்போது 25 கோடி வரை வாங்கிக் கொண்டிருப்பவர் , ஹச் வினோத்துடன் இணையும் அடுத்த படத்திற்கு 40 கோடி வரை சம்பளம் கேட்டு தயாரிப்பாளர் லலித் குமாரை அலற விட்டுள்ளார்.

ஹச் வினோத்துடன் இணையும் தனுஷின் D52 படத்தை தயாரிக்கும் உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.  தயாரிப்பாளர் லலித் குமார் அவர்கள் படத்தின் தயாரிப்பு, தொழிலாளர்களின் சம்பளம் என ஒரு வழியாக பஞ்சாயத்து பேசி 35 கோடி என பிக்ஸ் செய்து தனுஷை தாஜா பண்ணி சம்மதிக்க வைத்திருக்கிறார்.

Also read: காசிமேடு தான் தனுஷின் ராயனா? வாங்குன காசுக்கு மேல கூவும் இயக்குனர்!

Trending News