Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

இப்படியே இருந்தா காணாமல் போய்டுவேன்.. பயத்தில் போன் செய்த தனுஷ்

இப்படியே இருந்தா காணாமல் போய்டுவேன்.. பயத்தில் போன் செய்த தனுஷ்

தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. இந்நிலையில் தனுஷ் மறைமுகமாக பலரால் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். ஆனால் தனுஷ் இப்பொழுது நிம்மதி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார். நாலாபுறமும் அவருக்கு சோக பக்கங்களே சூழ்ந்து […]

தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியும், வேதனையும் அளித்தது. இந்நிலையில் தனுஷ் மறைமுகமாக பலரால் மிகுந்த நெருக்கடியில் உள்ளார். ஆனால் தனுஷ் இப்பொழுது நிம்மதி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார். நாலாபுறமும் அவருக்கு சோக பக்கங்களே சூழ்ந்து வருகிறது.

இப்படியே விட்டுவிட்டால் நம் கேரியரே போய்விடும், வாழ்க்கையும் போய்விடும் என்று எண்ணிய தனுஷ் இதில் இருந்து மீண்டு வருவதற்காக பல திட்டங்களை தீட்டி வருகிறார். அதில் ஒன்றுதான் அவர் படங்கள். இதனால் முழுவீச்சில் தனது படங்கள் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் படப்பிடிப்புக்கு செல்லும் போதும் யாருடனும் அதிகம் பேசாமல் தான் உண்டு, வேலை உண்டு என உள்ளாராம்.

தற்போது தனுஷ் தன்னை மறந்து மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு தயாராக வேண்டும் என்று எண்ணி அதற்காக அவர் எடுத்த மருந்து தான் அந்த இயக்குனர். தனுஷின் சூப்பர் ஹிட் படங்களான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்களை இயக்கியவர் வெற்றிமாறன்.

அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெறும். இந்நிலையில் எப்பொழுதுமே வெற்றிமாறன் படங்களில் மாஸ் காட்டும் தனுஷ், இந்த முறை வெற்றிமாறனுக்கு தாமாக முன்வந்து போன்போட்டு உடனே படம் பண்ணலாம் வாருங்கள் என்று கூறியுள்ளாராம்.

தற்போது வெற்றிமாறன் சூரியை வைத்து விடுதலை, சூர்யாவுடன் வாடிவாசல் ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து கமல் படம், விஜய் படம் என தொடர்ந்து கமிட்டாகியுள்ளார். தற்போது தனுஷ் ஒரு படம் பண்ணலாமா என கேட்டதால் அதிர்ச்சியடைந்த வெற்றிமாறன் அவர் மனதை தேற்ற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

தற்போது தனுஷ் தன் கவனத்தை வேறு திசையில் மாற்றுவதற்காக தனக்கு ஆஸ்தான இயக்குனரான வெற்றிமாறன் படத்தில் நடிக்க விரும்புகிறார். இதனால் வெற்றிமாறனும் இதற்கு சம்மதித்து உள்ளார். இதனால் மிக விரைவில் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் மீண்டும் ஒரு மாஸ் படம் உருவாக உள்ளது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.