திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சிவகார்த்திகேயனிடம் அசிங்கப்பட போகும் தனுஷ்.. தூக்கி வளர்த்த கடா எட்டி உதைக்க போகுது

Sivakarthikeyan and Dhanush: சினிமா பொறுத்தவரை நண்பர்களாக இருந்தால் கூட விரோதியாக மாறும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். அப்படித்தான் ஆரம்பத்தில் சிவகார்த்திகேயனுக்கு நல்ல ஒரு நண்பராகவும், இவருடைய கேரியருக்கு ஒரு பிரகாசத்தை கொடுக்கும் அளவிற்கு பக்கபலமாக இருந்து சப்போர்ட் செய்து வந்தார் தனுஷ். ஆனால் போகப் போக இவர்கள் இருவரும் இரு துருவங்களாக பிரிந்து எலியும் பூனையுமாக மோத ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த வகையில் தூக்கி விட்டவரையே எட்டி உதைக்கிற அளவிற்கு சிவகார்த்திகேயன் வளர்ந்து விட்டார். அதாவது வருகிற பொங்கலை முன்னிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் படங்கள் மோத போகிறது. இதில் வெற்றியைத் தாண்டி தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் இமேஜ் எப்படி மக்களிடம் ரீச் ஆகப்போகிறது என்பதுதான் பெரிய குதிரைக்கொம்பாக இருக்கிறது. அதாவது சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாக இழுத்தடித்து கொண்டிருந்த அயலான் படம் தற்போது தான் முடிவுக்கு வந்திருக்கிறது.

அதனால் பிளான் பண்ணியப்படியே பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணி விட வேண்டும் என்று மொத்த பட குழுவும் தீர்மானித்து விட்டார்கள். அதே மாதிரி தனுஷும் மிகப் பிரம்மாண்டமான முறையில் வித்தியாசமான லுக்குடன் அதிக அளவில் நம்பிக்கை வைத்து கேப்டன் மில்லர் படத்தை அயலான் படத்துடன் போட்டி போடுவதற்கு தயாராகி விட்டார்.

Also read: சமாதிக்கு போனா சந்தி சிரிக்க வச்சுருவாங்களே.! ஜகா வாங்கும் சிவகார்த்திகேயன்.. வசமாக சிக்கிய அயலான்

இதற்கு இடையில் இந்த ரெண்டு படங்களின் ட்ரெய்லரை பார்க்கும் பொழுது இரண்டுமே பார்ப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் தனுஷின் கேப்டன் மில்லர் படம் அதிகமான சண்டைக் காட்சிகளும் ரத்தக்களறியுமான விஷயங்கள் இடம் பெறுவதால் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்பது மிகப்பெரிய சந்தேகம் தான்

ஆனால் அயலான் படம் ஏலியன்ஸ் கதை சம்பந்தமாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் பார்க்கும் படியாக நிச்சயமாக வெற்றி பெற்று விடும். அத்துடன் வசூல் அளவிலும் கேப்டன் மில்லரை தோற்கடித்து சிவகார்த்திகேயன் வெற்றி பெற்று விடுவார். ஆனால் இது தெரிந்தும் தனுஷ் சிவகார்த்திகேயனிடம் அசிங்கப்பட தயாராகி விட்டார்.

இனிமேல் சிவகார்த்திகேயன் பக்கமே தலை வைத்து படுக்கக் கூடாது என்ற அளவிற்கு தனுசுக்கு கேப்டன் மில்லர் படம் ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கப் போகிறது. இந்த ஒரு விஷயம் தான் ஹாட் டாபிக்காக தற்போது போய்க்கொண்டிருக்கிறது. சிவகார்த்திகேயனின் அயலான் படமா அல்லது தனுஷின் கேப்டன் மில்லர் படமா என்று பார்க்கலாம்.

Also read: கேப்டன் மில்லர் விழாவில் தனுஷ் மானத்தை வாங்கிய ரசிகர்.. கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வைத்த தொகுப்பாளினி

Trending News