ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

தனுஷால் திருமணத்தை முறித்த 5 நட்சத்திர ஜோடிகள்.. நம்ம செஞ்சுவிட்டது நமக்கு திரும்ப செய்யுது!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, ரசிகர்கள் விரும்பும் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். எந்த அளவுக்கு அவருக்கு புகழ் இருக்கிறதோ, அதே அளவுக்கு பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதில் முக்கியமானது நடிகைகளின் விவாகரத்து சம்பந்தப்பட்ட அறிவிப்பு.

சினிமாவில் ஒரு நடிகை தன் விவாகரத்தை அறிவிக்கிறார் என்றால் அதற்கு பின்னணியில் இருக்கும் நபராக கருதப்படுபவர் தனுஷ். அப்படி அவரால் பிரிந்தால் சில நட்சத்திரங்களை பற்றி காண்போம்.

மிர்ச்சி சுசி: இவர் ரேடியோ ஜாக்கியாக இருந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான காபி வித் சுசி என்ற நிகழ்ச்சியை திறமையாக நடத்தினார். மேலும் சிறந்த குரல்வளம் கொண்ட இவர் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார்.

இவர் சில வருடங்களுக்கு முன் தன் காதல் கணவர் கார்த்திக்கை பிரிவதாக அறிவித்தார். மேலும் இதற்கு முக்கிய காரணம் நடிகர் தனுஷ் என்று வெளிப்படையாக போட்டு உடைத்தார். தனுஷின் பல ரகசியங்களையும் அவர் மீடியா முன் அம்பலப்படுத்தினார். இதனால் பல பிரச்சனைகளை சந்தித்த அவர் தற்போது சிங்கிளாக வாழ்ந்து வருகிறார். அவருடைய கணவர் கார்த்திக் சமீபத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

திரிஷா: அழகான நடிகையாக வலம் வரும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வந்தார். அவர்களுடைய திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு நிச்சயதார்த்தமும் செய்யப்பட்டது.

திருமணத்திற்கு சில நாட்கள் இருக்கும் சமயத்தில் திரிஷா தன்னுடைய திருமணத்தை திடீரென நிறுத்தினார். இது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் திரிஷாவின் இந்த முடிவுக்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று சொல்லப்பட்டது.

ஏனென்றால் தனுஷ் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்கிறார் என்றால் அதில் நிச்சயம் த்ரிஷா பங்கேற்பார். அப்படி அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் பல போட்டோக்கள் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதுதான் அவருடைய திருமணம் தடைப்பட்டதற்கும், தற்போது அவர் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்வதற்கும் காரணம் என்று ஊடகங்களில் ஒரு செய்தி இருக்கிறது.

அமலா பால்: இவர் மைனா என்ற ஒரு திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தவர். திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் போதே இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தன் கணவரை பிரிந்தார்.

அந்த சமயத்தில்தான் இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த நெருக்கத்தின் காரணமாக தான் அவர் தன்னுடைய கணவரை பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது. தற்போது அமலா பால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தன் போக்கில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

சமந்தா: தனுஷின் தோழிகள் வட்டாரத்தில் இவரும் ஒருவர். சமந்தா, தனுஷுடன் இணைந்து தங்க மகன் என்னும் திரைப்படத்தில் நடித்தார். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் நெருக்கம் இருந்ததாக ஒரு செய்தி உண்டு.

அதன்பிறகு சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டு ஆந்திராவில் செட்டிலானார். மேலும் திருமணம் நடந்த சில வருடங்களிலேயே சமந்தா தன் கணவரை விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்தார். தற்போது அவர் தன் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

விஜய் டிவி டிடி: சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிக பிரபலமாக இருப்பவர் டிடி. பல நாட்களாக சிங்கிளாக சுற்றி வந்த இவர் சில வருடங்களுக்கு முன் ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார். என்ன நடந்ததோ தெரியவில்லை அவரும் தன் கணவரை விவாகரத்து செய்தார்.

இதற்கும் நடிகர் தனுசுக்கும் சம்பந்தம் உள்ளதாக அப்போது செய்திகள் பரவியது. அதற்கு ஆதாரமாக டிடி, தனுஷுடன் நெருக்கமாக இருந்த பல புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. விவாகரத்துக்குப் பின் டிடி தற்போது தனிமையில் காலத்தை கழித்து வருகிறார்.

இந்த நடிகைகளின் திருமண முறிவுக்கு காரணம் என்று சொல்லப்பட்ட நடிகர் தனுஷ் தற்போது தன்னுடைய பதினெட்டு ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக சோசியல் மீடியாவில் அறிவித்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

- Advertisement -

Trending News