புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தனுஷ் படத்தில் இணையும் சிம்பு.. எஸ்டிஆர் க்கு என்ன கேரக்டர் தெரியுமா?

Dhanush – Simbu: தமிழ் சினிமாவில் தற்போது மல்டி ஸ்டார்ஸ் படங்களுக்கு பயங்கர வரவேற்பாகி விட்டது. முக்கிய பிரபலங்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் தான். அந்த வரிசையில் போட்டியாளர்களாக பார்க்கப்படும் தனுஷ் மற்றும் சிம்பு இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். அதிலும் அவர்கள் நடிக்க இருக்கும் கேரக்டர் தான் எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகர் தனுஷ் இப்போது பயங்கர பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு அவர் கைவசம் படங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தமிழ் மட்டுமில்லாமல் இந்தி மற்றும் தெலுங்கு படத்திலும் கமிட் ஆகி இருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் பார்ட் 2, வடசென்னை பார்ட் 2. புதுப்பேட்டை 2 என ரசிகர்களின் ஆசைக்கு ஏற்றவாறு இரண்டாம் பாகங்களும் காத்துக் கொண்டிருக்கிறது.

சிம்பு மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படம்

இந்த நிலையில் இசை ஞானி இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த கதையை இளையராஜாவே எழுதுகிறாராம். இயக்கப் போவது பிரபல இயக்குனர் மற்றும் இளையராஜாவின் நெருங்கிய நண்பர் பால்கி ஆகும். கனெக்ட் மீடியா தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருந்த நிலையில் தற்போது தனுஷ் நானே இந்த படத்தை தயாரிக்கிறேன், அது எனக்கு பெருமையான விஷயம் என்று இளையராஜாவிடம் சொல்லி இருக்கிறாராம்.

Also Read:தளபதி 68 படத்தின் கதை இதுதான்.. சிம்புவுக்கு ஒர்க் அவுட் ஆச்சு, விஜய்க்கு செட் ஆகுமா?

இளையராஜாவின் பயோபிக்கில் நிறைய முன்னணி நடிகர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. அதேபோன்றுதான் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுக்கும். இளையராஜா காலத்தில் ஏ ஆர் ரகுமான் வளர்ந்து வந்த பாதை என்பது ரொம்பவே முக்கியமானது. அதனால் கண்டிப்பாக அவருடைய பயோபிக்கில் ஏ ஆர் ரகுமான் உடைய கேரக்டர் கொஞ்சம் அதிகமாக வரும் என சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்புவை ஏ ஆர் ரகுமானின் கேரக்டரில் நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தனுஷ் இளையராஜா கேரக்டரிலும், சிம்பு ஏ ஆர் ரகுமான் கேரக்டரிலும் நடித்தாய் கண்டிப்பாக இந்த பயோ பிக் படம் வேறு விதமான வெற்றியை அடையும். இதற்காகத்தான் சிம்புவை தேர்வு செய்து இருக்கலாம்.

தனுஷ் தினமும் சூட்டிங் வேலைகள் முடிந்த பிறகு இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு சென்று விடுகிறார். அங்கு இருவரும் ரொம்ப நேரம் கதை டிஸ்கஷனில் ஈடுபட்டு வருகிறார்கள். சிம்புவை ஏ ஆர் ரகுமான் கேரக்டரில் நடிக்க வைப்பது தனுஷின் சொந்த விருப்பம் என்ற கூட சொல்லப்படுகிறது. இதைப்பற்றிய உறுதியான தகவல் விரைவில் வெளியாகலாம்.

Also Read:ரஜினி முதல் தனுஷ் வரை ரிஜெக்ட் செய்த கதை.. 4 பெரிய ஹீரோக்களை தாண்டி விக்ரமுக்கு வந்த பட வாய்ப்பு, ஜெயிப்பாரா?

Trending News