Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்.. அடுத்தடுத்த படங்களை தெறிக்க விடும் தனுஷ்

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? எதை பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணனும்.. அடுத்தடுத்த படங்களை தெறிக்க விடும் தனுஷ்

நடிகராக முன்னணி அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் சில ஆண்டுகள் கழித்து தனுஷ் இயக்கிய திரைப்படம் தான் ராயன். இந்த ஆண்டு […]

நடிகராக முன்னணி அந்தஸ்தில் இருக்கும் தனுஷ் பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் சில ஆண்டுகள் கழித்து தனுஷ் இயக்கிய திரைப்படம் தான் ராயன். இந்த ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக ராயன் இருக்கிறது.

முக்கியமாக இந்த ஆண்டு நூறு கோடி கிளப்பில் இந்த படமும் இருந்தது. ராயன் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி வரும் திரைப்படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இளைஞர்களை கவரும் வண்ணம் உருவாகி வரும் இப்படத்தில் அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் தான் ஹீரோவாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது.

பிளான் பண்ணி ரிலீஸ் பண்ணும் தனுஷ்.

இந்த நிலையில், ரசிகர்கள் படம் எப்போது திரைக்கு வரும் என்று கேட்டு இப்போதே நச்சரிக்க ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை வருகிற டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஏற்கனவே தனுஷ் இயக்கிய ராயன் படம் வெளிவந்த நிலையில், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக நடிப்பில் மிரட்டும் தனுஷ், ஒரு தரமான இயக்குனர் என்பதையும் நிரூபித்து வருகிறார்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்று தனுஷை பார்த்து வியந்து பலர் பாராட்டி வருகின்றனர். மேலும், தனுஷ் தான் கரெக்ட் ஆக பிளான் செய்து படத்தை வெளியிடுகிறார். அவரிடம் அந்த தெளிவு உள்ளது என்றும் சினிமா ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.