புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

பொண்டாட்டியோடு நண்பனை கவுக்க தரமான திட்டம் போட்ட தனுஷ்.. உங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் சரியா.?

Dhanush:  நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் ஹீரோக்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு இவருக்கு பட வாய்ப்புகள் லைன் கட்டிக்கொண்டு நிற்கின்றன. தனுஷை பொருத்தவரையிலும் அவருக்கென்று போட்டி என யாரையும் சொல்லி விட முடியாது. தனக்கான பாதையை சரியாக அமைத்து பயணித்துக் கொண்டிருக்கிறார்.

எவ்வளவுதான் ஒரு மனிதன் தன்னடக்கமாக இருந்தாலும் சில நேரங்களில் மமதை தலைக்கு ஏறி விடும் என்பதை நிரூபித்திருக்கிறார் தனுஷ். போட்டியே இல்லாமல் தமிழ் சினிமாவில் சிங்கம் போல் ஓடிக்கொண்டிருக்கும் ஹீரோ, சின்ன சின்ன அற்ப சந்தோஷங்களுக்காக இப்படி எல்லாம் செய்வது சரியா என கேட்கும் அளவிற்கு ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சிவராஜ்குமார் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் படம் கேப்டன் மில்லர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் வரலாற்று கதை இது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகின. கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு தனுஷ் படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஒரே கல்லில் இரண்டு மாங்காயை தட்டி தூக்கும் தனுஷ்

தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை டிசம்பரில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என சொல்லிவிட்டாராம். படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருப்பதாக தெரிகிறது. பொங்கல் கொண்டாட்டத்தன்று முன்னணி ஹீரோ ஒருவரின் படம் ரிலீஸ் ஆவது என்பது மக்களுக்கு சந்தோஷமான விஷயம் தான். ஆனால் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதியை பொங்கலுக்கு தள்ளியதற்கு காரணமே ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்கத்தான்.

Also Read:தனுஷ் படத்தில் இணையும் சிம்பு.. எஸ்டிஆர் க்கு என்ன கேரக்டர் தெரியுமா?

சிவகார்த்திகேயனுக்கு அயலான் படத்தின் ரிலீஸ் என்பது பல வருட போராட்டமாக இருந்தது. தீபாவளி ரிலீஸ் என சொல்லப்பட்டு தற்போது பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது. இந்த படம் ஏலியன் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதால் வெற்றியா தோல்வியா என்பது ரசிகர்களின் கையில் தான். அதே நேரத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படமும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் ஆக இருக்கிறது.

தனுஷ் உடனான திருமண முறிவுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் முதல் படம் லால் சலாம். எப்படியாவது ஜெயித்து காட்டி விட வேண்டும் என்பதற்காகத்தான் ரஜினிகாந்தை கேமியோ ரோலில் நடிக்க வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேப்டன் மில்லர் போன்ற ஒரு வரலாற்று படத்துடன் மோதுவது என்பது கொஞ்சம் சிக்கல்தான்.

அயலான் மற்றும் லால் சலாம் படங்களை கவுப்பதற்காகத்தான் தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறார். என்ன தான் தன்னுடைய தனிப்பட்ட கோபத்திற்காக இருவரையும் தோற்கடிக்க வேண்டும் என்று தனுஷ் நினைத்தாலும், இரண்டு தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை கருத்தில் கொண்டு இந்த முடிவை கைவிடலாம்.

Also Read:ரஜினி முதல் தனுஷ் வரை ரிஜெக்ட் செய்த கதை.. 4 பெரிய ஹீரோக்களை தாண்டி விக்ரமுக்கு வந்த பட வாய்ப்பு, ஜெயிப்பாரா?

Trending News