புதன்கிழமை, பிப்ரவரி 12, 2025

தனுசை புரிந்து கொள்ளாத சிவகார்த்திகேயன்.. காரணத்தை பேட்டியில் வெளிப்படையாக கூறிய பிரபலம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம் பெற்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அதனால் தற்போது இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயன் சமீபகாலமாக வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

அதற்குக் காரணம் சிவகார்த்திகேயனுக்கு பலரும் நடிக்க தெரியாமல் வெறும் காமெடி வைத்து தான் அவர் வெற்றி பெற்று வருவதாக கூறி வந்தனர். இதனைக் கேட்ட சிவகார்த்திகேயன் எனக்கும் எல்லா நடிகர் போல் நடிக்கத் தெரியும் என்பதை நிரூபிப்பதற்காக தற்போது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஏதாவது ஒரு படத்தில் வித்தியாசமான கதை தேர்வு செய்து நடித்துவிட்டு அதற்கு அடுத்த படமே கமர்சியல் ஆன ஒரு படத்தை கொடுத்து ரசிகர்களை தக்க வைத்துக்கொள்வார்.

சிவகார்த்திகேயன் 3 படத்தின் மூலம் தனுசுடன் இணைந்து நடித்திருந்தார். அப்போது தனுஷ் உங்களுக்கு காமெடி நன்றாக வருகிறது நல்ல கதை இருந்தால் ஹீரோவாக நடிக்க வைக்கிறேன் என கூறினார். அவர் சொன்னபடியே வெற்றிமாறன் உதவி இயக்குனரிடம் கதையை கேட்டு சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல் என்ற படத்தின் மூலம் நடிக்க வைத்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக இருந்தாலும் தனுஷ் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி அவரது சினிமா வளர்ச்சிக்கு உதவினார்.

அதன்பிறகு சிவகார்த்திகேயன் சினிமாவில் வளர்ச்சி அடைந்தார். இவர்கள் இருவருக்கும் ஏதோ ஒரு சில காரணங்களால் இவர்கள் இருவரும் இணையவில்லை மேலும் அனிருத் முதலில் தனுஷ் படத்துக்கு சிறப்பாக இசையமைத்துக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் படங்களுக்கு மட்டுமே அவர் சிறப்பாக இசையமைத்து வருவதாலும் தனுஷ்-அனிருத்திடமிருந்து பிரிந்ததாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி பேட்டியில் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் வளர்ச்சியில் தனுஷ் மிக முக்கியமானவர். அதாவது எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் அப்போது தனுஷ் மரியான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். சிவகார்த்திகேயனுக்காக தூங்காமலே காரில் வந்து எதிர்நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். அவர் நினைத்திருந்தால் இப்படத்தில் நடனம் ஆடாமல் இருக்கலாம் ஏனென்றால் அவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர்.

சிவகார்த்திகேயன் சினிமாவில் வளர வேண்டும் என்பதற்காகத்தான் தனுஷ் வந்து நடனமாடி கொடுத்ததாக நடிகர் சதீஷ் சமீபத்திய பேட்டியில் தெரிவித்தார். இதனை வைத்து பார்க்கும் போது தனுஷ் சிவகார்த்திகேயனை வளர்த்து விடும் எண்ணத்தில் தான் இருந்துள்ளார். ஆனால் இவர்களுக்குள் ஏதோ ஒரு சில பிரச்சினையால்தான் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

Trending News