Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தனுஷிற்காக செல்வராகவன் செய்த செயல்.. இவங்களுக்குள்ள இவ்வளவு ஒற்றுமையா

நடிகர் தனுஷ் தற்போது நடித்துவரும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் நடிகர் தனுஷ் குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது மனம் திறந்த பேச்சுனை பேசியுள்ளார். நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக […]

நடிகர் தனுஷ் தற்போது நடித்துவரும் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ள நிலையில் நடிகர் தனுஷ் குறித்து இயக்குனர் செல்வராகவன் தனது மனம் திறந்த பேச்சுனை பேசியுள்ளார்.

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகராக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறார். அதற்கு முழுக்காரணம் அவருடைய அண்ணனும், முன்னணி இயக்குநருமான செல்வராகவன் தான். இவரின் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலமாக தனுஷை அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின் இவரின் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்கள் தனுஷின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்டது.

இதனிடையே மயக்கம் என்ன திரைப்படத்துக்குப் பின் 12 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் நானே வருவேன் திரைப்படம் உருவாகி கொண்டு வருகிறது. மேலும் தனுஷ் உடைய கதையைத்தான் செல்வராகவன் இயக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். செல்வராகவன் முதல்முறையாக தனது தம்பி எழுதிய கதையை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தனுஷின் வளர்ச்சியைப் பற்றி செல்வராகவன் புகழ்ந்துள்ளார். தற்போது நடிகர் தனுஷ் தற்போது என்னுடைய தம்பி என்பதை சொல்வதை விட பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என கலக்கும் நடிகர் என்று சொல்வது தான் பொருத்தமானது.

அவரது வாழ்க்கையின் வெற்றிக்கு நான் காரணமல்ல அவரது விடாமுயற்சியும் கடினமான உழைப்பே காரணம்.சமீபத்தில் நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்ததன் மூலமாக செல்வராகவன் தன்னுடைய நடிப்பு திறமையை ரசிகர்களிடம் காண்பித்து வருகிறார்.

மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் சாணிக்காயிதம் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே தற்போமச்சிது தனுஷின் நானே வருவேன் திரைப்படமும் செல்வராகவனின் சாணிக்காயிதம் திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.