Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தனுஷை கண்காணிக்க சிறப்பு குழு.. விஜய்க்கு வரும் புதிய சவால்

தனுஷை கண்காணிக்க சிறப்பு குழு.. விஜய்க்கு வரும் புதிய சவால்

தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு இப்போது சினிமா வட்டாரத்தை தாண்டி அரசியல் களத்திலும் கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. அவர் தானாக அரசியலுக்கு வருகிறாரா அல்லது அவரைச் சுற்றியுள்ள சிலரால் அழைத்து வரப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது. நடிகர் […]

தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பேச்சு இப்போது சினிமா வட்டாரத்தை தாண்டி அரசியல் களத்திலும் கவனம் பெற ஆரம்பித்திருக்கிறது. அவர் தானாக அரசியலுக்கு வருகிறாரா அல்லது அவரைச் சுற்றியுள்ள சிலரால் அழைத்து வரப்படுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றிருப்பது, ஏற்கனவே அரசியலில் இருக்கும் பலருக்கும் ஒரு முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு இருக்கும் ஆதரவு, அடுத்த தேர்தல் கணக்குகளில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதுதான் இப்போது முக்கியமான கேள்வி.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் அரசியல் முடிவில் இருந்து விலகினார். அதன்பிறகு விஜய் நேரடியாக அரசியல் களத்தில் இறங்கியது, சினிமா பிரபலங்களை வைத்து உருவாகக்கூடிய அரசியல் வாய்ப்புகள் குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனுஷுக்கு தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் வரவேற்பை அரசியல் வாக்குகளாக மாற்ற முடியுமா என்பது வேறு விஷயம். ஆனால் விஜய்க்கு செல்லக்கூடிய ஒரு குறிப்பிட்ட இளைஞர் வாக்கு வங்கியில் தனுஷ் தாக்கத்தை ஏற்படுத்தினால், தேர்தல் கணக்கில் அது நிச்சயம் பேசப்படும்.

விஜய் பக்கம் இருக்கும் இளைஞர்களை தனுஷ் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டால் ஓட்டுக்கள் குறையும் நமக்கு தோல்வி ஏற்படும் என்ற எண்ணத்தில் தனுசை கண்காணிக்க சிறப்பு குழு அமைத்துள்ளார்கள்.

ஆனால் இவை அனைத்துமே இப்போதைக்கு அரசியல் கணக்குகள்தான். தனுஷ் உண்மையில் அரசியலுக்கு வருகிறாரா, வந்தால் எந்த கொள்கையுடன் வருகிறார், யாருடன் கூட்டணி அமைக்கிறார், தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறார் என்பதுதான் அவருடைய அரசியல் பலத்தை தீர்மானிக்கும்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.