வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூப்பர் ஸ்டாரை சந்தோஷப்படுத்திய தனுஷ்.. பதிலுக்கு ரஜினி கொடுக்கும் சர்ப்ரைஸ்

தனுஷ் தற்போது முழு வீச்சில் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களை தொடர்ந்து அவருடைய நடிப்பில் வாத்தி திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதை தொடர்ந்து கேப்டன் மில்லர் திரைப்படமும் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே தனுஷின் குடும்ப வாழ்க்கை பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது. தற்போது அவையெல்லாம் முடிவுக்கு வந்திருக்கிறது. பல மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பழைய கருத்து வேறுபாடுகளை மறந்து விட்டு தற்போது ஒன்றாக இணைந்து வாழ இருக்கின்றனர்.

Also read:புது வாழ்க்கையை தொடங்க போடும் மாஸ்டர் பிளான்.. பழசை மறந்தாலும் எதையும் மாற்றாத தனுஷ்- ஐஸ்வர்யா

தனுஷ் தற்போது போயஸ் கார்டனில் தன் மாமனார் வீட்டுக்கு அருகில் ஒரு கனவு இல்லத்தை கட்டிக் கொண்டிருக்கிறார். அந்த வீட்டில் வரும் ஜனவரி மாதம் கிரகப்பிரவேசம் செய்ய திட்டமிட்டுள்ள தனுஷ் அங்கு தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குடியேற திட்டமிட்டு இருக்கிறாராம். அதனால் வீட்டின் வேலைகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இவர்கள் விவாகரத்து முடிவை கைவிட்டு இணைந்து வாழ முடிவு செய்தது சூப்பர் ஸ்டாரை உற்சாகத்தில் ஆழ்த்தியது. அதிலும் புது வீட்டில் புது வாழ்க்கை வாழப் போகும் தன் மகள், மருமகனை நினைத்து அவர் ரொம்பவும் சந்தோஷத்தில் இருக்கிறாராம். அதனால் அவர் தனுசுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்க நினைத்துள்ளார்.

Also read:காலா, கோச்சடையான் படங்களால் வந்த வினை.. டாட்டா போட்டு தலைதெறிக்க ஓடும் ரஜினி

அதாவது ரஜினியுடன் இணைந்து ஒரு சிறு கதாபாத்திரத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தனுஷின் நீண்ட நாள் ஆசையாக இருக்கிறது. அதற்காக பலமுறை முயற்சி செய்தும் தனுஷின் இந்த கனவு மட்டும் நிறைவேறாமலே இருந்தது. அதைத்தான் தற்போது சூப்பர் ஸ்டார் நிறைவேற்ற இருக்கிறார். இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் ரஜினி அடுத்தடுத்து மூன்று திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் அவர் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். அந்த படத்தில் தான் தனுசுக்கு ஒரு கேமியோ ரோல் கொடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். இந்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also read:இதுவரை ரஜினி செய்யாத காரியம்.. சூப்பர் ஸ்டாரான பிறகு முதன்முதலாக சென்னையில் நடக்கும் அதிசயம்

Trending News