வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிம்புவை வம்பு இழுக்கும் தனுஷ்.. அப்பதான் ஆட்டம் சூடு பிடிக்கும்

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் இன்று ரிலீஸ் ஆகி முழுக்க முழுக்க பாசிட்டிவ் ரிவியூக்களை மட்டுமே பெற்று வருகிறது. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு ரிலீஸ் ஆன இந்த படத்தை சிம்பு ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

சினிமாவை பொறுத்தவரை சம காலத்தில் வளர்ந்து வருபவர்களுக்கு எப்போதுமே ஒரு தொழில் போட்டி இருக்கும். போட்டி இல்லையென்றாலும் சுற்றி இருப்பவர்கள் ஏதாவது ஒன்றை கிளப்பி கொண்டே தான் இருப்பார்கள். அந்த வகையில் சிம்புவின் படத்தில் தனுஷை கலாய்ப்பதும், தனுஷின் படத்தில் சிம்புவை கலாய்ப்பதும் வழக்கமாக நடைபெறும்.

Also Read: வெந்து தணிந்தது காடு, சிம்புக்கு ஒரு லட்சம் பைன் போடு.. சுக்குநூறான ஆடி கார்

இதுவும் ஒரு வகையான சினிமா தந்திரம் தான். ரசிகர்களுக்குள் பிரச்சனையை கிளப்பி விட்டால் தான் அந்த ஹீரோக்களுக்காக சண்டை போட்டு ரசிகர்கள் படம் வெற்றியடைய செய்வார்கள். ஹீரோக்கள் நட்பாக பழகினாலும் படத்தின் வெற்றிக்காக இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பிளான் பண்ணி இதை செய்வார்கள்.

சமீபத்தில் தனுஷின் படம் திருச்சிற்றம்பலம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் தனுஷ் எது மாஸ் என்று ஒரு ஸ்பீச் கொடுத்து இருப்பார். அதை தொடர்ந்து நடந்த வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ லாஞ்சில் தனுஷின் அந்த பேச்சை STR மறைமுகமாக கலாய்த்து இருப்பார்.

Also Read: முத்து வீரன் டானாக உருமாறிய வெந்து தணிந்தது காடு.. மிரட்டி விட்ட சிம்பு, ரஹ்மான்

இப்படி தனுஷ் ரசிகர்களை ஏத்தி விட்டால் தான் ரசிகர்களுக்குள் சண்டை வந்து, சிம்புவின் ரசிகர்கள் வெந்து தணிந்தது காடு படத்தை வெற்றியடைய செய்வார்கள் என்பது தான் பிளான். இப்படி தான் சிம்பு ஈஸ்வரன் பட ட்ரெய்லரின் போதும் தனுஷின் அசுரன் படத்தை வம்புக்கு இழுத்து இருப்பார்.

இந்த மாஸ்டர் பிளானில் அடுத்ததாக இன்று வெந்து தணிந்தது காடு பட ரிலீஸின் போது தனுஷின் நானே வருவேன் பட டீசர் வெளியாகிறது. ஆனால் இன்று டீசர் வெளியாவதற்கு தனுஷ் காரணமில்லை என்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தான் என்று கூறுகிறார்கள்.

Also Read: GVM-சிம்பு கூட்டணியின் வெந்து தணிந்தது காடு எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Trending News