புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குணசேகரன் முகத்தில் கரியை பூசும் தர்ஷன், தாரா.. குட்டி நந்தினி போட்ட சவால், கலைக்கட்டும் எதிர்நீச்சல்

Ethirneechal: சன் டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோ வேற லெவலில் இருக்கிறது. சொத்து ஆசையில் பெத்த மகளையே கடத்தி வைத்து கட்டிய மனைவியை ஜெயிலுக்கு அனுப்பிய குணசேகரனுக்கு இனி தான் அழிவு காலம் ஆரம்பிக்கிறது.

இதுவரை அவருக்கு ஜால்ரா தட்டி வந்த கூட்டம் எல்லாம் அவரை எதிர்த்து நிற்கின்றனர். ஆனாலும் தன் கெத்தை விடாத குணசேகரன் திமிராகவே இருக்கிறார். அதன்படி தற்போது வெளிவந்துள்ள ப்ரோமோவில் தாரா குட்டி தன் அப்பாவுக்காக குணசேகரனை எதிர்த்து பேசுகிறார்.

Also read: சிங்கப்பெண்ணே: கையும் களவுமாக சிக்கிய மித்ரா.. திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஆன நிலைமை

உங்க சொத்து, காசு எதுவுமே எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லும் குட்டி நந்தினி அந்த காட்சியில் வேற லெவலில் மிரட்டி இருக்கிறார். அதை அடுத்து தர்ஷன் என்னுடைய தங்கச்சி திரும்ப எங்க கிட்ட வருவா, என் அம்மாவை வெளியில் கூட்டிட்டு வருவேன். எனக்கு அப்பான்னு யாருமே கிடையாது என குணசேகரன் முகத்தில் கரியை பூசுகிறார்.

இப்படி நண்டு சிண்டு எல்லாம் சவால் விட்டு நோஸ்கட் கொடுக்கின்றனர். இதனால் அதிர்ந்து போனாலும் வெளியில் காட்டிக் கொள்ளாத குணசேகரன் தனி மரமாக நிற்கப்போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது தெரிகிறது. இப்படியாக விறுவிறுப்பாக சீரியலை கொண்டு செல்லும் இயக்குனரையும் ஆடியன்ஸ் பாராட்டி வருகின்றனர்.

ஆக மொத்தம் தர்ஷினியின் வழக்கு தற்போது வேறு ரூட்டுக்கு பயணிக்க போகிறது. ஏகப்பட்ட பிளான்களை வைத்திருக்கும் ஜனனி தனக்கு ஆதரவாக சேர்ந்திருக்கும் குடும்பத்தினருடன் விரைவில் மர்ம முடிச்சுகள் அனைத்தையும் அவிழ்க்க போகிறார்.

Also read: முத்துவிடம் இருந்து எஸ்கேப் ஆன ரோகினி.. மாட்டிக்கொண்டு முழிக்கும் மீனா, மனோஜ்

Trending News