நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை வென்றிருக்கிறது. மழையால் நேற்றைய முன் தினம் நடைபெற வேண்டிய போட்டி ஒத்திவைக்கப்பட்டது. நேற்றும் கிட்டத்தட்ட நள்ளிரவு வரை மழை சென்றதால் போட்டி எப்படி இருக்கும், முடிவு எப்படி இருக்கும் என பலருக்கும் சந்தேகம் எழ ஆரம்பித்தது.
மதிப்பு புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் இருந்ததால் மழை நிற்கவே இல்லை என்றால் அந்த அணிக்கே கோப்பை வழங்கப்படும் என பலராலும் கணிக்கப்பட்டது . இந்நிலையில் மழை நின்றவுடன் போட்டியை தொடங்கிய சிஎஸ்கே அணிக்கு 15 ஓவரில் 171 இலக்கு என நிர்ணயிக்கப்பட்டது.
Also Read:அதிக வாத்து முட்டை வாங்கிய முதல் 5 ஐபிஎல் வீரர்கள்.. தமிழ்நாட்டு மானத்தை வாங்கிய தினேஷ் கார்த்திக்
கான்வே , அம்பத்தி ராயுடு, ரகானே, துபே, ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் முக்கிய பங்கு வகித்தனர். கான்வே விக்கெட்டிற்குப் பிறகு சென்னை அணி ரசிகர்கள் மொத்தமாய் நொந்து போய் விட்டனர். சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி எப்படியாவது தன்னுடைய பினிஷிங் டச் கொடுத்து விடுவார் என்று நம்பியிருந்த நிலையில் அவர் டக் அவுட் ஆகி வெளியேறினார். அவ்வளவுதான் இந்த முறை சிஎஸ்கே தோற்றுவிட்டது என அத்தனை பேரும் முடிவே செய்து விட்டனர்.
கடைசி ரெண்டு ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டபோது சிறப்பாக தன்னுடைய பேட்டிங் திறமையை காட்டினார் ஜடேஜா. அடுத்தடுத்து ஆறு மற்றும் நான்கு என ரன்கள் வாங்கி சிஎஸ்கே யின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறிவிட்டார். மேலும் நேற்று தோனியும் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.
அப்போது பேசிய தோனி தன்னுடைய ஓய்வு அறிவிப்பை பற்றியும் பேசி இருந்தார். ஓய்வு அறிவிப்பதற்கு இதுதான் சிறந்த நேரம், இந்த நேரத்தில் ஓய்வை அறிவித்து விட்டால் அது எளிதாக இருக்கும் என நினைக்கிறேன் என்று கூறினார். மேலும் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் மிகப்பெரிய அன்பிற்கு பரிசாக அடுத்த சீசனில் நான் விளையாடுவதே சரியாக இருக்கும் என்று கூறினார்.
ஆனால் அடுத்த சீசனில் ஆடுவதற்கு வரும் ஒன்பது மாதங்களும் கடினமான உழைப்பை போட வேண்டியது வரும். அதற்கு என்னுடைய உடல்நிலை ஒத்துழைக்குமா என்பது சந்தேகம் என்று சொல்லி இருக்கிறார் தோனி. மேலும் இந்த சீசனில் ஓய்வு பெற போகும் அம்பத்தி ராயுடுவின் திறமைகளைப் பற்றியும் பேசி இருந்தார். ரகானே போன்ற சிறந்த வீரர் சிஎஸ்கே அணியில் இருப்பது இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் என்றும் கூறி இருக்கிறார் தோனி.
Also Read:கிரிக்கெட்டில் நடந்த 5 அருவருப்பான சம்பவம்.. இந்திய அணியை கெடுத்து குட்டிச்சுவராக்கிய அசாருதீன்