வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

87 நாட்கள் பெய்டு ஹாலிடேக்கு வந்தீங்களா.? பிக் பாஸ் ரசிகையின் கேள்வியை வைத்து அசிங்கப்படுத்திய அசீம்

பிக் பாஸ் நிகழ்ச்சி 21 பேருடன் தொடங்கிய நிலையில் ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இப்போது 8 பேர் உள்ளனர். இந்நிலையில் இன்னும் 2, 3 வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வைக்கப்பட்டது.

இதில் போட்டியாளர்கள் இடையே கேள்வி கேட்கப்படுகிறது. அந்த வகையில் ரக்ஷிதா மற்றும் அசீம் இருவரும் ஒருவருக்கொருவர் கேள்வி கேட்டு கொள்கின்றனர். அதில் 87 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் பயணித்த ரக்ஷிதா இதுவரை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதுவும் செய்ததில்லை.

Also Read : சும்மா தின்னுட்டு தின்னுட்டு டைட்டில வின் பண்ணலாம்னு நினைச்சீங்களா?. போட்டியாளர்களை வச்சி செஞ்ச பிக் பாஸ்

அதுமட்டுமின்றி கமல் எபிசோடில் ரசிகர்கள் ஒரு முறை கேள்வி கேட்டனர். அதில் பிக் பாஸ் ரசிகை ஒருவர் மைனா நந்தினி, ரக்ஷிதா உங்களது பெய்டு ஹாலிடேஸ் எப்படி இருக்கிறது என்று கேட்டிருந்தார். அதாவது சின்னத்திரை தொடர் மூலம் கவர்ந்த இவர்கள் பிக் பாஸ் வீட்டில் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்வார்கள் என எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அதற்கு நேர் மாறாக இருவரும் எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் சாதுரியமாக விளையாடுகிறார்கள். ஆகையால் அசீம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் ரசிகர்கள் பெய்டு ஹாலிடேக்கு வந்தீங்களா என்று கேட்டார்கள், அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.

Also Read : சோசியல் மீடியாவில் வழுக்கும் எதிர்ப்பு.. பிக் பாஸ் எலிமினேஷனை குறித்து கொந்தளித்த ஆர்மி

அதற்கு பதில் அளித்த ரக்ஷிதா ரீல் முகத்தையும், ரியல் முகத்தையும் வெளியில ஏற்கனவே காட்டியாச்சு. இந்த நடிக்கணும் என்ற அவசியம் எனக்கு கிடையாது. நான் எல்லாத்தையும் நிறைவாக விளையாண்டு இருக்கிறேன் என ரக்ஷிதா கூறியுள்ளார். அசீம் இவ்வாறு பேசியதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

ஆனால் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் அசீமை தோற்கடித்து ரக்ஷிதா வெற்றி பெற்றார். ஆகையால் மற்ற ஹவுஸ் மேக்ஸ் உடன் கொஞ்சம் ஆணவத்துடன் ரக்ஷிதா செயல்பட்டு வருகிறார். இதற்கு அமுதவாணன் மற்றும் ஏடிகே இருவரும் ரக்ஷிதாவை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Also Read : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டன்.. 83 நாட்களுக்கு மொத்தமாக வாங்கிய சம்பளம்

Trending News