வியாழக்கிழமை, நவம்பர் 14, 2024

2025 டெஸ்ட் சாம்பியன் யாரு.. தினேஷ் கார்த்திக் சொன்ன அதிர்ச்சி தகவல்

2019/21 காலகட்டத்தில் முதல் முதலாக ஐசிசி வேர்ல்ட் டெஸ்ட் சாம்பியன்ஸ் டிராபி ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வருடம் புள்ளி விவரங்களில் எந்தெந்த நாடு முன்னிலை வகிக்கிறதோ அதில் இரண்டு நாடுகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். அப்படி இதுவரை இரண்டு டெஸ்ட் உலக சாம்பியன் போட்டிகள் நடைபெற்றுள்ளது.

முதல் முதலாக 2021ல் இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதில் போட்டியை சமன் செய்யும் வாய்ப்பு இந்தியாவிற்கு இருந்தும் கூட தோல்வியை தழுவியது.

2023ஆம் ஆண்டும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தகுதி பெற்றது. இந்த முறை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியை சந்தித்தது. போட்டி நடைபெற்ற இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் இந்திய அணி மீண்டும் தோல்வியை தழுவியது. இரு முறை வெற்றி வாய்ப்பு இருந்தும் இந்தியாவிற்கு கோப்பை கைநழுவியது.

தினேஷ் கார்த்திக் சொன்ன அதிர்ச்சி தகவல்

இப்பொழுது 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் தேதி மூன்றாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது. 11ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்க உள்ளது. ஒரே ஒரு நாள் அதாவது 16ஆம் தேதி மட்டும் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டி இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த முறை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதனால் இவ்விருவனிகளும் இறுதிப்போட்டியில் மோதும் என்பது தெரிகிறது. லார்ட்ஸ் மைதானம் இந்திய வீரர்களுக்கு பழக்கப்பட்டது. அதனால் அவர்கள் எளிதில் சமாளித்து ஆஸ்திரேலியாவை வீழ்த்துவார்கள் என்று தினேஷ் கார்த்திக் கூறுகிறார்.

- Advertisement -spot_img

Trending News