Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ரஜினியின் கையை பிடித்த விஜய் டைரக்டர்கள்.. வினோத் பெயரும் லிஸ்டில்!

ரஜினியின் கையை பிடித்த விஜய் டைரக்டர்கள்.. வினோத் பெயரும் லிஸ்டில்!

Rajini : முதலில் விஜய் படத்தை எடுத்து விட்டு அடுத்ததாகவே ரஜினியுடன் சில இயக்குனர்கள் கூட்டணி போட்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இப்போது வினோத்தும் இடம்பெற்றிருக்கிறார். அதாவது விஜய் நடிப்பில் இப்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் […]

Rajini : முதலில் விஜய் படத்தை எடுத்து விட்டு அடுத்ததாகவே ரஜினியுடன் சில இயக்குனர்கள் கூட்டணி போட்டிருக்கிறார்கள். அந்த லிஸ்டில் இப்போது வினோத்தும் இடம்பெற்றிருக்கிறார். அதாவது விஜய் நடிப்பில் இப்போது ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் இயக்குனர் வினோத் அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக இதே போன்று விஜய் படத்தை முடித்த கையோடு ரஜினி படத்தை இயக்கிய இயக்குனர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏஆர் முருகதாஸ் விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். அதுவும் சர்கார் படத்தை இயக்கிய கையோடு ரஜினியின் தர்பார் படத்தை இயக்கினார். இப்போது சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை இயக்கி வருகிறார்.

விஜய்யின் படத்தை இயக்கி விட்டு அடுத்ததாக ரஜினி படத்தை இயக்கிய இயக்குனர்கள்

அடுத்ததாக நெல்சன் விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. ஆனால் அடுத்ததாக ரஜினியை வைத்து இயக்கிய ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இப்போது ஜெயிலர் 2 படத்தை எடுத்து வருகிறார்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் விஜய் வைத்து இயக்கிய லியோ படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ரஜினியை வைத்து கூலி படத்தை எடுத்திருக்கிறார். இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர இருக்கிறார்கள்.

இப்போது இந்த லிஸ்டில் வினோத்தும் இணைந்திருக்கிறார். ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது. இதற்கு முன்னதாகவே வினோத் ரஜினியின் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.