வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜவான் படத்துக்கு அட்லி வாங்கிய சம்பளம்.. நெல்சன்,லோகேஷ்க்கு எல்லாம் வாத்தியாராய் மாறிய குட்டி தம்பி

Atlee Salary for Jawan: யார் எப்படி கழுவி ஊற்றினால் என்ன நம் வேலை நடந்தால் சரி என்று தன்னுடைய பாதையில் பயணித்துக் கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லி. என்னதான் இவர் காப்பி அடித்து படம் எடுக்கிறார் என நெட்டிசன்கள் கதறி கூப்பாடு போட்டாலும், முன்னணி ஹீரோக்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து மேலும் மேலும் உச்சத்திற்கு தான் கொண்டு போகிறார்கள்.

படம் ரிலீஸ் ஆனதிலிருந்து இது அந்தப் படத்தின் கதை, இந்த படத்தின் கதை என எவ்வளவு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், படத்தின் வசூல் வெற்றிக்கு அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் பக்க பலமாக நிற்கிறார்கள். இதனாலேயே அட்லியின் பிழைப்பு ஓஹோ என்று போய்க்கொண்டிருக்கிறது. இவர் இயக்கிய 5 படங்களில் நான்கு படங்கள் டாப் ஹீரோக்களை வைத்து பெரிய பட்ஜெட்டில் உருவானவை தான்.

Also Read:அட்லி இயக்கிய 5 படங்களின் மொத்த வசூல் ரிப்போர்ட்.. கதையை விட காசு தான் முக்கியம் பிகிலு!

அட்லிக்கு விஜய் எப்படி அடுத்தடுத்து மூன்று படங்களின் வாய்ப்புகளை கொடுத்தார் என்று சினிமா பிரபலங்கள் யோசித்துக் கொண்டிருந்த போது, அவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு இவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானையே வளைத்துப் போட்டுவிட்டார். கிட்டத்தட்ட நான்கு வருட உழைப்பிற்கு பிறகு இந்த படமும் இப்போது ரிலீஸ் ஆகிவிட்டது.

கடந்த 7ஆம் தேதி ரிலீஸ் ஆன ஜவான் படம் முதல் நாளில் 125 கோடி வசூல் செய்திருக்கிறது. விரைவில் இந்த படம் ஆயிரம் கோடி வசூலை தொட்டு விடும் என கணிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த படத்திற்காக இயக்குனர் அட்லி வாங்கிய சம்பளம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

Also Read:சமந்தாவின் காதல் காவியத்தை சுக்கு நூறாக்கிய ஜவான்.. முதல் நாள் என்ட்ரியிலேயே காலியான குஷி

சினிமாவில் அறிமுகமாகி இதுவரை 5 படங்களை மட்டுமே எடுத்து இருக்கும் அட்லிக்கு சுமார் 60 கோடியை சம்பளமாக கொடுத்து இருக்கிறார் ஷாருக்கான். படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொகை உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது. இப்போதைக்கு அட்லி வாங்கிய சம்பளம் அனைவரையும் மூக்கின் மேல் விரைவில் வைக்கும் அளவிற்கு செய்து இருக்கிறது.

என்னதான் எண்ணெயை தேச்சுட்டு உருண்டாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும் என்பது போல் இப்போதைய சென்சேஷனல் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் திலீப் குமார் இருவரும் உயிரைக் கொடுத்து ஒவ்வொரு படத்தையும் ரிலீஸ் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், கமர்சியல் ஹிட் கொடுத்து கோடிகளில் புரள்கிறார் அட்லி.

Also Read:உலக அளவில் ஓப்பனிங்கில் அதிர வைத்த 5 படங்கள்.. ஜெயிலரை மிஞ்சிய ஜவான்

Trending News