வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

பாலு மகேந்திராவின் சிறந்த 6 படைப்புகள்.. இன்றுவரை அழியாத ‘மூன்றாம் பிறை’

இயக்குனர் பாலு மகேந்திரா, இயக்குனர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா வரிசையில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம். ஒளிப்பதிவாளராக தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கிய பாலு மகேந்திரா பின்னாளில் அசைக்க முடியாத தமிழ் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இவருடைய படங்களை காவியங்கள் என்றே சொல்லலாம்.

மூன்றாம் பிறை: உலகநாயகன் கமலஹாசன் நூற்றுக்கணக்கில் படங்கள் பண்ணியிருந்தாலும் இன்று வரை அவர் பெயர் சொல்லும் படம் என்றால் அது மூன்றாம் பிறை தான். மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் அப்படிதான். ஒரு அழகான காதல் கதையை ஒவ்வொரு காட்சியிலும் கவிதை போல் சொல்லி இருப்பார் இயக்குனர் பாலு மகேந்திரா.

Also Read: பல்லு போன வயதில் பக்கோடா சாப்பிட்ட 5 பிரபலங்கள்.. 60 வயதில் முப்பதை தட்டி தூக்கிய பாலு மகேந்திரா

மூடுபனி: மூடுபனி திரைப்படம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது தன்னுடைய துறுதுறுப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோபா தான். மேலும் இளையராஜா இசையில் என் இனிய பொன் நிலாவே பாடல் இன்றைய இளைஞர்களுக்கு கூட பிடித்த ஒன்றாக இருக்கிறது.

ரெட்டை வால் குருவி: ஒரு திருமணமான ஆணுக்கு வரும் பொருந்தா காதலை கூட அழகாக சொல்ல முடியும் என்றால் அது இயக்குனர் பாலு மகேந்திராவால் மட்டும் தான் முடியும். மோகன், ராதிகா, அர்ச்சனா போன்றோரின் எதார்த்தமான நடிப்பில் இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சதிலீலாவதி: கமலஹாசன், கோவை சரளா, கல்பனா, ரமேஷ் அரவிந்த், ஹீரா என வித்தியாசமான கூட்டணியில் உருவான திரைப்படம் தான் சதிலீலாவதி. பாலு மகேந்திராவின் படம் என்றால் இப்படி தான் இருக்கும் என்ற இலக்கணத்தை மாற்றிய திரைப்படம் தான் சதிலீலாவதி. முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாய் கொண்டு இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார் பாலு மகேந்திரா.

Also Read: பாலுமகேந்திரா உட்பட 2 பெரிய ஜீனியஸ் இயக்கத்தில் நடித்த ஒரே நடிகர்.. இனிமேல் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு

மறுபடியும்: தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் கூட இப்படி ஒரு படத்தை இனி யாராலும் எடுக்க முடியாது. கணவனேயே நம்பி இருக்கும் மனைவி, மாடர்ன் மங்கையின் மீதான கணவனின் காதல், மனைவியின் நலத்தை மட்டுமே விரும்பும் நண்பன் என இந்த மூவரையும் சுற்றி அமைக்கப்பட்ட கதை இது. நடிகை ரேவதியின் சினிமா வாழ்க்கையில் எப்போதுமே மறக்க முடியாத திரைப்படம் இது.

நீங்கள் கேட்டவை: பூர்ணிமா பாக்யராஜ், தியாகராஜன், சில்க் ஸ்மிதா, அர்ச்சனா போன்றோரின் சிறந்த நடிப்பில் உருவான திரைப்படம் நீங்கள் கேட்டவை. இந்த படத்தில் பாடகி ஜானகியின் குரலில் வரும் ‘பிள்ளை நிலா’ பாடல் என்றும் பசுமையாகவே இருக்கும்.

Also Read: மனவளர்ச்சி குன்றியதாக நடித்த 5 நடிகைகள்.. கல்யாண கலாட்டா செய்த குஷ்பூ

 

Trending News