Director Gautham Vasudev Menon: காதல் திரைப்படங்களை ரசித்து அனுபவித்து எடுத்த இயக்குனர்களுள் இயக்குனர் கௌதம் மேனனும் ஒருவர். இப்போது அவர் ஃபீல் அவுட் ஆகிவிட்டார் என்று தான் சொல்லணும். ஏனென்றால் படங்களை இயக்குவதை காட்டிலும் கௌதம் மேனன் தற்போது நடிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார். ஆனால் இவர் எடுத்த படங்களில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த ஐந்து படங்களை அவர் நினைத்தாலும் இனிமேல் திரும்பி எடுக்க முடியாது. அப்படிப்பட்ட ஐந்து படங்களை பற்றி பார்ப்போம்.
மின்னலே: கௌதம் மேனன் எழுதி இயக்கிய அற்புதமான காதல் திரைப்படம் தான் மின்னலே. இந்த படத்தில் மாதவன், அப்பாஸ், ரீமாசென், விவேக், நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்தனர். ‘காதலுக்காக ஒரு பெண்ணை ஏமாற்றுவது தவறு தான். ஆனா அதன் விளைவுகளை யோசிக்காமல் இது போன்ற தவறுகளை செய்ய வைப்பது தான் காதல்’ என்பதை இந்த படத்தின் மூலம் கௌதம் மேனன் புரிய வைத்தார். அதுதான் இந்த படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. இதில் சாம் என்ற கேரக்டரில் அப்பாஸ் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு அப்பாஸின் சினிமா கேரியர் டாப் கியரில் எகிறியது. இதே மாதிரி ஒரு படம் வேண்டும் என்று அப்பாஸ் கௌதம் மேனனிடம் கெஞ்சி கேட்டார், ஆனா அது கடைசி வரை நடக்கல.
காக்க காக்க: சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெளிச்சத்தை பாய்ச்சியது கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க திரைப்படம் தான். இதில் அசால்டாக என்கவுண்டர் செய்யும் போலீசுக்கும், அண்ணனை பறி கொடுத்த பிரபல ரவுடிக்கும் இடையே நடக்கும் ஆக்சன் மோதல் தான் அந்தப் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
ஒரு நேர்மையான ஐபிஎஸ் அதிகாரியான அன்பு செல்வனுக்கு பள்ளி ஆசிரியை மாயாவுடன் ஏற்படும் அழகான காதலை இதில் கௌதம் மேனன் காட்டினார். இந்த படத்தில் சூர்யா, ஜோதிகா இருவரும் ஒரிஜினல் காஜல் ஜோடி என்பதால் இவர்களுக்கிடையே ரொமான்ஸ் காட்சிகளையும் கௌதம் மேனன் கொஞ்சம் தூக்கலாகவே காட்டினார். இப்போ நினைத்தால் கூட அவரால் காக்க காக்க படம் போல் இன்னொரு படத்தை எடுக்க முடியாது. அந்த அளவிற்கு தன்னுடைய மொத்த சரக்கையும் இதில் இறக்கி விட்டார்.
Also Read: கொஞ்சம் அசந்ததனால் சிம்புக்கு வந்த நிலை.. GVM படத்துக்கு பின் STR எடுத்த தடாலடி முடிவு
கௌதம் மேனன் கொடுத்த தரமான 5 படங்கள்
வாரணம் ஆயிரம்: கௌதம் மேனன் இயக்கிய மிக சிறந்த காதல் திரைப்படம் தான் வாரணம் ஆயிரம். இதில் தந்தை மகன் உறவை சொன்ன விதமும், காதல் தோல்வி அடைந்த இளைஞன் எப்படி தன்னுடைய வாழ்க்கையை பாசிட்டிவாக மாற்றினார் என்பதை கௌதம் மேனன் ஆத்மார்த்தமாக பதிவு செய்தார்.
விண்ணைத்தாண்டி வருவாயா: ஹிந்து பையன் சிம்புவுக்கும், கிறிஸ்தவ பெண்ணான திரிஷாவுக்கும் ஏற்படும் காதலுக்கு குறுக்கே நிறைய தடைகள் வருகிறது. அதை மீறி காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? ஹீரோ தன்னுடைய லட்சியத்தை அடைந்தாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை. இதில் கௌதம் மேனன் முதலில் காதலாலும் இறுதியில் சோகத்தாலும் நம்மை அடிக்கிறார். ஏனென்றால் இந்த படத்தில் சிம்பு- த்ரிஷா இருவரும் சேர மாட்டார்கள், ஆனா சிம்பு டைரக்டராக எடுக்கும் படத்தில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்தார் ஸ்டைலிஷ் இயக்குனர் கௌதம் மேனன்.
என்னை அறிந்தால்: கௌதம் மேனன் எடுத்த ஸ்பெஷல் போலீஸ் கதையில் இன்னும் ஓர் அத்தியாயம் தான் என்னை அறிந்தால் திரைப்படம். இந்த படத்தின் கதையை அனுஷ்காவில் ஆரம்பித்து, அஜித்- அருண் விஜய்யின் நட்புக்கு தாவி, அதன் பின் மாபியா- போலீஸ் சேசிங், இதற்கிடையில் திரிஷா- அஜித் இடையே காதல், ஆசிஷ் பகை, உறுப்பு கடத்தல் என பல சுற்றுகளுக்கு பிறகு தன் படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும். இதில் ஒரு முதிர்ச்சியான காதல் மற்றும் காதலின் இழப்பு தரும் தடுமாற்றம் என அஜித்தை வேறொரு கோணத்தில் காட்டியதுதான் கௌதமின் மேஜிக்.